குற்றாலத்தில் பெரியாரின் சாரல் மழை! பெரியாரின் கொள்கை மழை.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

குற்றாலத்தில் பெரியாரின் சாரல் மழை! பெரியாரின் கொள்கை மழை....

ஆசிரியர்

முதல்

கவிஞர் 

வரை....


கருத்தாளர்களின் 

தொடர் 

பொழிவால் ....


மூன்று

 நாட்களாக 

குற்றாலத்தில்

அருவியாக 

கொட்டியது.


கொள்கை

அருவியின்

கருத்து 

சாரல்

மழையில்.....

மகிழ்ச்சியாக

குளித்து 

நனைந்தார்கள்

இரு 

பால் 

மாணவர்கள் .....


விட்டு 

விட்டு 

பொழிந்து

வருகிறது

குற்றால

சாரல் 

மழை .....


விடாமல் 

தொடர்ந்து

பொழிகிறது 

பெரியாரின்

கருத்து 

சாரல்

 மழை.....

 குற்றால

அருவியில்

குளித்தால்

 உடல் 

வெப்பம் 

தணியும் ....


பெரியாரின்

கொள்கை

அருவியில் 

குளித்தால்...


இரண்டாயிரம்

ஆண்டுகால

சனாதன

வெப்பம்

 தணியும்.....


- பொன். பன்னீர்செல்வம், 

மாவட்ட செயலாளர் 

திராவிடர் கழகம் 

காரைக்கால்.

No comments:

Post a Comment