மோடி கடைப்­பி­டிக்­கும் மவு­னம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

மோடி கடைப்­பி­டிக்­கும் மவு­னம்!

புதுடில்லி, ஆக. 20 - நாட்டில் பிரச் சினை ஏற்படும் போதெல்லாம் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பார் என டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

டில்லி சட்டபேரவையில் 18.8.2023 அன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் பேசுகையில்,‘‘ பிரதமர் நாட்டின் தலைவர் ஆவார். மணிப்பூரில் இளம் பெண்கள் பாதிக்கப்பட்டபோது, மோடி திரும்பிக் கொண்டார். அவர் தன்னுடைய அறையிலேயே உட்கார்ந்து கொண்டார். அவரது அமைதிக்கான காரணம் குறித்து நாட்டு மக்கள் அனைவரும் கேள்வி கேட்டனர். இது மாதிரி அவர் இருப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 9 ஆண்டு களில் இது போல் அவர் பல முறை அமைதி காத்துள்ளார்.

 மல்யுத்த கூட்டமைப்பின் மேனாள் தலைவரும் பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சிங் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டங்கள் நடத்தினர். அப்போ தும், பிரதமர் அமைதியாக இருந்தார். ஆனால், பன்னாட்டு போட்டிகளில் மல்யுத்த வீராங்கனை கள் பதக்கங்களை வென்று இந்தியா திரும்பிய போது அவர்களுடன் ஒளிப்படம் எடுக்க அவர் தவறவில்லை. வீராங்கனைகள் எனது மகள் என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என அவர் உறுதியளித் திருக்கலாம். அவர்கள் உச்சநீதிமன்றத் துக்கு சென்ற பின்னர்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மணிப்பூர் கல வரத்திலும் குறைந்தபட்சம் அமைதி ஏற்படுவதற்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கலாம்’’

-இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment