பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் பேச்சு - ஓவியம் - கட்டுரைப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் பேச்சு - ஓவியம் - கட்டுரைப் போட்டி

சென்னை, ஆக.31-- பள்ளி _ கல்லூரி மாணவ சமுதாயத்தினரி டையே திருக்குறளின் கருத்து களைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கவும் சிறீராம் இலக்கியக் கழகம் வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 19 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ _ மாணவி யரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த இருக்கிறது.

இடைநிலை (6_8ஆம் வகுப்பு கள்), மேல்நிலை (9_12ஆம் வகுப் புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.shriramchits.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வந்து சேர வேண்டிய கடைசி தேதி, செப்டம் பர் 30 ஆகும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment