விக்ரம் லேண்டரை படம் எடுத்த ரோவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

விக்ரம் லேண்டரை படம் எடுத்த ரோவர்


பூமியிலிருந்து தன்னை இந்த நிலவுக்கு சுமந்துகொண்டு வந்து, நிலவில் தடம் பதிக்க உதவிய விக்ரம் லேண்டரை, பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து இஸ்ரோ விண்வெளி ஆய்வு மய்யத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த புகைப்படங்களை பகிர்ந்திருக் கும் இஸ்ரோ.. ஸ்மைல் ப்ளீஸ் என்று புகைப்படக் கருவியின் சிறிய புகைப் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளது மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டி ருக்கும் பதிவில், 

ஸ்மைல், ப்ளீஸ்!

விக்ரம் லேண்டரை அண்மையில் பிரக்யான் ரோவர் படம் பிடித்துள்ளது.

ரோவரில் அமைந்துள்ள நேவிகேஷன் கேமராவின் மூலம், இந்த மிக அற்புதமான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் - 3 விண்கலத்தில் பொருத் தப்பட்டிருந்த நேவிகேஷன் கேமரா வானது எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தில் ‘பிரக்யான்’ ரோவர் நிலவின் மேற்பரப்பில் தனது ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், ‘சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டி ருக்கும் ‘லேசரால் தூண்டப்படும் ஸ்பெக்ட் ரோஸ்கோப் கருவியின் (எல்அய்பிஎஸ்)’ ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் மூலம், தென் துரு வத்தின் அருகேயுள்ள பகுதியில் கந்தகம் இருப்பது சந்தேகமின்றி உறுதியாகியுள் ளது.

பெங்களூரு இஸ்ரோ வளாகத்தில் அமைந்துள்ள மின்-ஒளியியல் அமைப் புக்கான ஆய்வகத்தில் உருவான எல் அய்பி எஸ் கருவி உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment