திருவாரூரில் ‘நீட்' தேர்வை எதிர்த்து திராவிடர் கழகத்தின் மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

திருவாரூரில் ‘நீட்' தேர்வை எதிர்த்து திராவிடர் கழகத்தின் மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருவாரூர், ஆக. 31
- திருவாரூரில் நீட் தேர்வு எதிர்த்து திராவிடர் கழகத்தின் திராவிட மாணவர் கழகம், திராவிடர் இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண் டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 22.08.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திருவா ரூர் பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் நடை பெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு திரா விட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் மு.இளமாறன் தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக மாவட்ட இளைஞ ரணி தலைவர் கோ.பிளாட்டோ அனைவரையும் வரவேற்று கண்டன உரை ஆற்றினார். 

மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன், திருவாரூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.பாஸ்கர், நகர இளைஞரணி தலைவர் அ.செல்வகுமார், நகர இளைஞரணி செயலாளர் சி.தமிழவன் கொரடாச்சேரி ஒன்றிய இளைஞரணி செயலா ளர் பாலசந்தர் ஆகியோர் முன் னிலையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் வீ.மோகன் உரையாற்றினார். தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நன்னிலம் ஒன்றிய செயலாளர் சு.ஆறு முகம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அஜெ.உமாநாத் ஆகியோர் கண்டன முழக்கம் ஆற்றினார்கள். 

நகர தலைவர் கா.சிவராமன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் சு.ஆறுமுகம், குடவாசல் ஒன்றிய செயலாளர் க.அசோக்ராஜ், இளம் புயல் தே.நர்மதா, பகுத் தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர்  கோ.செந்தமிழ்செல்வி, தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் இராம.அன் பழகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். 

இந்நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் கி.அருண் காந்தி, மாவட்ட துணை செய லாளர் கோ.ராமலிங்கம், திரு வாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ரெ.ஈவேரா, மாவட்ட விவசாய தொழிலாள ரணி தலைவர் பி.ரெத்தினசாமி, திருவாரூர் நகர தலைவர் கா.சிவ ராமன், நகரச் செயலாளர் ப. ஆறுமுகம், நகர துணை செயலா ளர் நா.துரைராஜ், 

ஒன்றிய தலைவர் கா.கவுதமன், ஒன்றிய துணை தலைவர் இரா.ராஜேந் திரன், குடவாசல் ஒன்றிய தலை வர் நா.ஜெயராமன், ஒன்றிய செயலாளர் க. அசோக்ராஜ், கொரடாச்சேரி ஒன்றிய செயலா ளர் மு.சரவணன்,  திருத்துறைப் பூண்டி நகர தலைவர் சு.சித் தார்த்தன், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய செயலா ளர் இரா.அறிவழகன், ஒன்றிய துணை செயலாளர் நா.செல்வம், நன்னிலம் பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் சு.கரிகாலன், முன்னாள் மண்டல செயலாளர் ஓவியர் சங்கர், நாகை மாவட்ட தொழிலாளரணி செயலாளர் ராஜ.முருகையன், 

மாவட்ட இளைஞரணி தலைவர் மு.ராஜ மோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கி.சுரேஷ், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, இலவங்கார்குடி திராவிட மணி, கணேசன்,  திரு நெய்பேர் கோவிந்தராஜ், மயிலா டுதுறை ஜீவன் ராஜ், பழனிச்சாமி மாணவரணி தோழர் இளமா றன்,  ஆகியோர் ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment