கடைசி நபருக்கும் நீதி கிடைக்கச் செய்வதே சவாலான வேலை : உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

கடைசி நபருக்கும் நீதி கிடைக்கச் செய்வதே சவாலான வேலை : உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி

புதுடில்லி. ஆக. 17-  நீதியை அணுகுவதற்கான தடை களை அகற்றி கடைசி நபரும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதே இந்திய நீதித்துறையின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும் என்று  உச்ச நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சுதந்திர நாள் விழா நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப் பிட்டார். அவர் பேசியதாவது: நீதிமன்றங்களை அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் உள்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் எளிதில் அணுகக்கூடிய மற்றும் செலவு குறைந்த நீதித் துறை அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

நீதிக்கான நடைமுறை தடைகளை கடப்பதற்கு தொழில்நுட்பத்தின் முழுத் திறனையும் பயன்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தில் இதுவரை 9,423 தீர்ப் புக்கள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளன. இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை 19,000 வழக்குகள் உச்சநீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தை பார்க்கும்போது நீதியை அணுகுவதற் கான தடைகளை அகற்றுவதே இந்திய நீதித்துறை முன் உள்ள மிகப்பெரிய சவால் என்று நான் நம்புகி றேன். பொதுமக்கள் நீதிமன்றங்களை அணுகுவதை தடுக்கும் தடைகளை அகற்றி, நீதிமன்றங்களின் திறன் மீது நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம், நடைமுறை ரீதியாக நீதிக்கான அணுகலை மேம்படுத்த வேண்டும் என்றார் தலைமை நீதிபதி சந்திரசூட்.


No comments:

Post a Comment