அய்.அய்.டி. மாணவர்கள் தற்கொலை விசாரணை அறிக்கை அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

அய்.அய்.டி. மாணவர்கள் தற்கொலை விசாரணை அறிக்கை அளிப்பு

சென்னை, ஆக. 17- அய்.அய்.டியில் தொடரும் மாணவர்கள் தற் கொலை தொடர்பாக விசாரிப்பதற் காக அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையிலான விசாரணைக் குழு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. 

சென்னை அய்.அய்.டியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வரு கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டில் மார்ச் மாதம் வரை யில் மட்டும் 4 மாணவர்கள் தற் கொலை செய்து கொண்டனர். கடந்த மார்ச் மாதம் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாணவர் விடுதியில் தற் கொலை செய்து கொண்டார். அதே மாதம் 31ஆம் தேதி, சென்னை அயஅய்டியில் முனைவர் பட்டத் திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின் (31), வேளச்சேரியில் அவர் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவர் சச்சின்குமார் தற் கொலைக்கு காரணமான அய் அய்டி பேராசிரியர் கே.வி.ஷென் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரைக் காப்பாற்ற அய்அய்டி நிர்வாகம் நடவடிக்கை எடுப்ப தாகக் குற்றம் சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவரின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.  இதனைத் தொடர்ந்து, அய்அய்டி மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற அய்பிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இக்குழு அமைக்கப் பட்டது. இதில், ஓய்வு பெற்ற அய்அய்ஏஎஸ் அதிகாரிகள் சபிதா, கண்ணகி பாக்கியநாதன், பேராசிரி யர் ரவீந்திர கெட்டு, அமல் மனோ கரன் ஆகிய 5 பேர் இடம் பெற்றி ருந்தனர். இக்குழு, அய்அய்டி மாணவர்கள், தற்கொலை செய்து கொண்ட அய்அய்டி மாணவர்க ளின் பெற்றோர், நண்பர்கள் உள் ளிட்ட பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. நேரடி யாகவும், காணொளி வாயிலாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட் டது. 

இந்த நிலையில், சென்னை அய்அய்டி மாணவர்கள் தற்கொலை தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி திலகவதி தலைமையிலான குழு நேற்று (16.8.2023) விசாரணை அறிக்கையை சென்னை அய்அய்டியிடம் சமர்ப் பித்து உள்ளது. 

சுமார் 300 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்பிக்கப் பட்டுள்ளது. அதில், அய்அய்டி வளாகத்தில் மாணவர்கள் பேராசிரியர்களி டையே இணக்கமான சூழலை உறுதிப்படுத்த வேண்டும், மாண வர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளா கும் வகையிலான நடவடிக்கைகள் இடம் பெறாத வகையில் அய்அய்டி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment