‘ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் முறைகேடு போலிக் கணக்குகள் மூலம் இறந்தவர்கள் பெயரில் முறைகேடு: சிஏஜி அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

‘ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் முறைகேடு போலிக் கணக்குகள் மூலம் இறந்தவர்கள் பெயரில் முறைகேடு: சிஏஜி அறிக்கை

புதுடில்லி, ஆக. 17- பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத் தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்த அறிக்கை மக்கள வையில் கடந்த வாரம் தாக் கல் செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ள தகவல்கள் இப்போது வெளியாகி உள் ளன. உயிரிழந்த 3446 நோயா ளிகளுக்கு பிரதமரின் ஆயுஷ் மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்ததாக ரூ.6.97 கோடி அளவுக்கு மோசடி நடந்து உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியை தவறா கப் பயன்படுத்துதல், போலி கணக்குகள், முறை யான ஆதாரங்கள் இல்லா மல் நிதியை விடுவித்தல் என பல ஓட்டைகள் கண்டறியப் பட்டுள்ளன. இந்த மோசடியில் கேரளா முத லிடத்தில் உள்ளது.  

அந்த மாநிலத்தில், ஏற்கெ னவே இறந்துபோன 966 நோயாளிகளின் பெயர்க ளில் காப்பீட்டு தொகையை பெற்றுள்ளனர். அவர்க ளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பிலான தொகை வழங்கப்பட்டிருக்கிறது. 403 பேரின் பெயரில் காப்பீட்டு தொகையை பெற்று மத்தி யப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 50 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மருத்துவச் சேவையை வழங்கும் நோக்கத்தில் 2018இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்மூலம், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment