சென்னை தாம்பரத்தில் 'நீட்' தேர்வை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்று உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

சென்னை தாம்பரத்தில் 'நீட்' தேர்வை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்று உரை

தாம்பரம், ஆக. 24 - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையை ஏற்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் 22.8.2023 அன்று சென்னை கழக மாவட்டங்களின் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்றது.

ச.பிரின்சு என்னாரெசு
துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையில், 

தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகள் 35 உள்ளன. இரண்டு அரசு பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலேயே 37 அரசு மருத்துவக்கல்லூரிகள், 24 தனியார் மருத்துவக்கல்லூரிகள் இருக்கிற மாநிலம் தமிழ் நாடுதான். தமிழ்நாட்டின் மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களின் தலைநகரங்களில்கூட இதுபோன்று ஒரு வசதி இருக்க வில்லை. நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக்கட்ட மைப்புகள் சிறப்பாக உள்ளன. இதனை அழிப்பதற்குத்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. 2017முதலே தமிழ்நாட் டில்தான் நீட் தேர்வை தொடர்ச்சியாக எதிர்த்து வருகி றோம்.அதற்கு முன் நுழைவுத் தேர்வையும் எதிர்த்து வந்துள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற, நாடாளு மன்றத் தேர்தல்களிலும் நீட்டை திணித்துவருகின்ற பாஜக வுக்கு எதிராகவே  வாக்களித்து வருகிறார்கள் என்றார்.

பா.மணியம்மை
மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை உரையில், 

நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டுக்கு வந்தால் பெரும் பாதிப்பு என்று முதன்முதலாக எச்சரித்தவர் தமிழர் தலைவர் அவர்கள்தான். அரசியல் தலைவர்களிடத்திலும், தமிழ்நாடு முழுவதிலும் நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு களம் அமைத்தவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்குச் சென்ற நான்கு அணிகளில் ஒரு அணியை தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள்தான் தொடங்கி வைத்தார். இன்றைக்கு நம்மைத் தாண்டி இந்தியாவைத் தாண்டியும் நீட் நுழைவுத்தேர்வை எதிர்க்கக்கூடிய நிலை வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் பல்வேறு போராட்டங்கள், மாநாடுகள், கருத்தரங் கங்கள் கழகத்தின் சார்பில் நடைபெற்றன. இன்றைக்கும் தமிழ்நாடு முழுவதும் நீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நிச்சயமாக இதற்கு விடியல் வரும் என்றார்.

ச.இன்பக்கனி
துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி உரையில், 

அரசமைப்புச்சட்டத்துக்கு, சமூகநீதிக்கு எதிரானது நீட். கிராமப்புற மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் தான் படிக்கிறார்கள். ஆனால் நாடுமுழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்மூலம் நீட் தேர்வை திணிப்பதேன்?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சமூக நீதி வழங்குவது தமிழ்நாட்டில்தான்.

உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகளில் இருவர் நீட் தேர்வு கூடாது என்று தீர்ப்பளித்தனர். மூன்றாவது நீதிபதி ஏ.ஆர். தாவே மட்டும் நீட்டுக்கு ஆதரவாக இருந்தார். அப்போதே நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்கிற தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுவிட்டது.ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் சீராய்வு மனு நீட் வேண்டும் என்று கூறிய நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்து நீட் தேவை என்று தீர்ப்பு வழங்கியது.

நீட்டை எதிர்த்து போராடி வருவது தமிழ்நாடு மட்டும் தான். மண்டலுக்காக போராடியதும் தமிழ்நாடுதான். திரா விடர் கழகத் தலைவர்தான். தற்பொழுது மண்டல் அறிக் கையால் நாடுமுழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் பலன் பெறுகிறார்கள் என்றார்.

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்

திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் வழக்கமாக சென்னையில்தான் நடைபெறும். இந்த முறை தாம்பரத்தில் நடைபெறுகிறது. காரணம் அண்மையில் இந்த பகுதியில் குரோம்பேட்டையில் நீட்டுக்கு எதிராக மறைந்த ஜெகதீசுவரன்,  அவர் தந்தையார் சந்திரசேகர் உயிரிழந் தனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். 

ஹையர் செகண்டரி போர்டு இந்தியா முழுவதும் 158 உள்ளன. வெவ்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. அங்கீ கரிக்கப்பட்டவை 702 போர்டுகள். இவர்களுக்கெல்லாம் பொதுவாக ஒரு தேர்வாம். அந்த தேர்வும் யாரால் நடத்தப்படுகிது என்றால், நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி என்று சொல்லக்கூடிய அவர்களும் அவுட்சோர்சிங் செய்து பியர்சன் என்கிற அமெரிக்க நிறுவனத்தின்மூலமாக இந்த நீட் தேர்வு நடைபெறுகிறது.

பள்ளிகளில் ஹோம்ஒர்க் செய்வதற்காக சிறிய கோச்சிங் சென்டர் ஆரம்பித்ததுதான் பியர்சன் நிறுவனம். அது பல கிளைகளாக மாறி நாடுகளைக்கடந்து, தற்பொழுது வசதி படைத்தவர்களை தேர்வு செய்துவருகிறது.

உலகம் முழுவதும் பொது நுழைவுத் தேர்வு என்று உண்டு. பல்வேறு நாடுகளிலும் இரண்டு ஆண்டுகளில் மறு ஆய்வு செய்து நீக்க வேண்டியதை நீக்கி வருகின்றன. அண்மையில் கேம்பிரிட்ஜ் , கலிபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்த மாதிரி தேர்வு முறையை கருப்பின மக்களுக்காக, அவர்களின் கல்வி வாய்ப்புகளை பெற முடியாமல் மறுக்கின்ற இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை அவர்கள் நீக்கிவிட்டார்கள். புத்திசாலித் தனமான அரசுகள் இதை செய்கின்றன. அதை இந்த ஒன்றிய அரசிடம் நாம் எதிர்ப்பார்ப்பது நம்முடைய தவறு. நீதிபதி ஏ.கே.ராஜன் 165 பக்க அறிக்கை அளித்தார். பொதுநுழைவுத்தேர்வுகள் குறித்த அம்பேத்கரின் கருத்தை பதிவு செய்துள்ளார்.

1984-1985இல் இதுபோன்று நுழைவுத் தேர்வு கொண்டு வந்தபோது ஏறத்தாழ 22 ஆண்டுகள் தொடர்ந்து போராடி, 2007இல் அது விலக்கப்பட்டது. 

நாடு முழுவதும் 705 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் 1,08,500 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு தேர் வெழுதியவர்கள் 17,64,000 மாணவர்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 9,93,000. நீட் தேர்வில் மொத்தம் 720 மதிப் பெண்கள். 150 வினாக்கள். 3 மணி நேரம். பெர்சன்டைல் என்கிறார்கள். தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டுவதுபோன்று பிராக்டீஸ் இருக்க வேண்டும். இந்த தேர்வு தகுதி தேர்வு என்று சொல்ல முடியாது. பயிற்சி மய்யங்களில் ஆண்டு தோறும் 25, 30 லட்சம் என கட்டணம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் மேல் கோச்சிங் சென்டர்கள் உள்ளன.

நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ -என்சிஆர்பி என்கிற குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில், நாடு முழுவதும் சென்ற ஆண்டு மட்டும் பல்வேறு காரணங்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 13,089பேர். இதில் அதிகம்பேர் மாணவர்கள் என்கிறது அந்த அறிக்கை.

மராட்டியம், பெங்களூரு, டில்லி என பல இடங்களிலும் நீட்டால் பலரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீட்தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் முதலிலிருந்தே குரல் கொடுத்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு கல்வியை ஒத்திசைவுப்பட்டியலிலிருந்து (கன்கரண்ட் லிஸ்ட்) மாநில பட்டியலில் கொண்டு வரவேண்டும் என்பதுதான். அதற்கான போராட்டத்தை திராவிடர் கழகம் தொடங்கியது, தொடர்ந்து இதில் போராடி வெற்றி அடைவோம்  திராவிடர் கழகம் எடுத்த எந்த ஒரு போராட்டத்திலும் தோல்வியே கிடையாது, காலம் வேண்டுமானால் தாமதிக்கலாம், ஆனால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார். 

கழகத்துணைத் தலைவர்
கழகத்துணைத் தலைவர் உரையில்,

நீட் என்பது வேறு ஒன்றுமில்லை, நீட்டா நம் மக்களை ஒழிப்பதுதான். ஒரேயொரு வைரசைக்கொண்டு நீட்டா ஒழித்துவிடவேண்டும் என்பதுதான். ஏனென்றால் கீழே இருந்து வந்தவன் எல்லாம் டாக்டர்கள் ஆகிவிட்டானே, குப்பன் எம்.எஸ்., சுப்பன் எம்.டி., ஆகிவிட்டார்களே. இதையெல்லாம் அவர்கள் பார்க்கும்போது வயிற்றெரிச்சல். தீண்டத்தகாதவன் எல்லாம் டாக்டராவதா, அவனிடத்தில் போய் வைத்தியம் செய்துகொள்வதா என்கிற ஜாதிக் கொழுப்பு. ஜாதி ஆணவம், பார்ப்பனத்திமிர். 

இது ஒரு சூழ்ச்சி என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. 2010இல் காங்கிரசுதான் கொண்டு வந்தது. திமுக கூட்டணியில் இருந்தது என்கிறார்கள். உண்மை. அப்போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்தவர் யார்? இன்றைக்கு பிரதமராக உள்ள நரேந்திர மோடி. அவர் நீட்டை எதிர்த்தாரா, ஆதரித்தாரா? எதிர்த்தார்.

நீங்கள் அதைத்தான் கவனிக்க வேண்டும். நீட்டையும் எதிர்த்தார். ஒன்றிய அரசினுடைய ஜிஎஸ்டியை எதிர்த்தார். 

இடம் மாறின, உடனே ஆள் மாறிவிடுகிறார்.

இதில் என்ன ஒழுங்கு இருக்கிறது? 

நீட் கூடாது என்று சொன்ன புத்தி, குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது வருகிறது.

எப்படி மாறிச்சு?

இவ்வளவும் கேட்டா,  அவர் பிற்படுத்தப்பட்டவர் என்கிறார்கள்.

இவர் காதைத் திருகுவது ஆர்.எஸ்.எஸின் நாக்பூர். இவர் ஒன்றும் தானாக முடிவு எடுத்துவிடவில்லை. இப்போது ஒரு செய்தி வந்திருக்கிறது, அடுத்த பிரதமராக மோடி...? என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்துள்ளது. 

அதனாலே மோடிதான் பிரதமர் என்கிற உறுதி யெல்லாம் அங்கே இல்லை. ஏனென்றால், மக்களிடத்திலே பெரிய விழிப்புணர்வு வந்திருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிந்துபோச்சு.

இவரை முன்னிறுத்தினால், நம்ம ஆட்சி காலி, ஆட்டம் காலி என்று அவர்களிடத்தில் அப்படி ஒரு முடிவு இருக்கிறது.ஆனால், இவர் ரொம்ப குதிக்கிறார்.

தந்தைபெரியார் சொல்வார், நிஜப்புலியைவிட,  வேஷம் போட்ட புலி அதிகம் குதிக்கும்.

இது நிஜப்புலி அல்ல, வேஷம் போட்ட புலி. 

ஏன்னா சந்தேகம் வந்திருக்கு. நம்மை புலி இல்லை என்று நினைத்துவிடுவார்களோ, வேஷம் போட்ட புலி என்று நினைத்துவிடுவார்களோ என்பதால் அதிகமாக குதிக்கும். எல்லாமே அய்யா சொல்லியுள்ளார்.

இது வேஷம் போட்ட புலி. 

12ஆம் வகுப்பு படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, டாக்டராகி, இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சென்றுள்ளார்கள்.

தந்தைபெரியார் ஒரு கேள்வி கேட்டார், ஏம்பா, டாக்டர் படிப்பு முடித்து கோல்டு மெடல் வாங்கினானே, அவனெல்லாம் எங்கே இருக்கறான்னு கேட்டார்.

அவன்தான் புகழ்பெற்ற டாக்டராக இருக்கிறானா? தகுதி திறமைஎன்பதையே புரட்டு என்றார், மோசடி என்றார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராகணும்னா என்ன தகுதி? என்றார், உடல் திண்மை இருக்கணும், சமயோசித புத்தி இருக்கணும். துணிவு இருக்க வேண்டும். 

அதில்லாம, திருடன் ஓடும்போது, டேய், ஓடாதே, நான் எம்.எஸ்சி.,ன்னா நின்றுவிடுவானா? எம்.எஸ்சி படிப்புக்கும், அந்த வேலைக்கும் என்ன சம்பந்தம்? 

அதனால்தான் தந்தைபெரியார், தகுதி திறமை என்பது புரட்டு, இது பார்ப்பனர் செய்த ஏமாற்று வேலை.

மனப்பாடக்கல்வி, அது பார்ப்பானுக்கு வசதி. வேத சுலோகங்களை மனப்பாடம் பண்ணிபண்ணி, அந்த அடிப்படையிலே, மனப்பாடக் கல்வியாக இருக்கிற காரணத்தாலே மனப்பாடக் கல்வியில் வெற்றி பெறுகிறான்.

ஆனால், நீட்டுக்கும் டாக்டர் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இன்னும் சொன்னால் நீட், டாக்டர்களுக்கான தேர்வா? டாக்டர் உத்தியோகத்துக்கும், நீட்டுக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க. 12 வருசம் படிக்கிறார், அனிதா 1176 மதிப்பெண் வாங்கினார். அதைக் குப்பைக்கூடையில் தூக்கிப் போடணுமா?

என்ன ஆகும்னா, 12ஆம் வகுப்புவரைக்கும் படிப்பது வீண், இது வேஸ்ட் என்று படிக்க மாட்டான்.

இவன் 12ஆம் வகுப்புக்குக்கூடப் போகக்கூடாது என்று நினைக்கிறான். இதில் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. பெரிய திட்டமிருக்கு.

அந்த அடிப்படையில்தான், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்பதாக சொன்னாங்க. 

இங்கதான பெரியார் பிறந்தார், இதுதானே திராவிட மண்,அதனால் எதிர்ப்பு வருகிறது.

தந்தைபெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதே சமூகநீதிக்காகத்தானே, பார்ப்பனர்கள் முட்டாள்கள். நான் 50 சதவீதம் கேட்டேன், கொடுக்க மாட்டேன் என்றான், இன்றைக்கு 69 சதவீதம் வந்துவிட்டதே!

பெரியார் சொன்னார், ஒரு காலம் வரும், எங்களுக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள் என்று கேட்கக்கூடிய காலம் பார்ப்பனர்களுக்கு வரும்.

எவ்வளவு தொலைநோக்கு பாருங்கள்.

எஸ்விசேகர் என்று ஒரு நடிகன். ஒரு நாள் திடீரென்று பெரியார் திடலுக்கு வந்துவிட்டார். ஆசிரியர் என்னைக் கூப்பிட்டார், எதற்கு வந்திருக்காருன்னு.

கலைஞரைப் போய்ப் பார்த்தாராம் சேகர், எங்களுக்கு வந்து ஒரு 10 சதவீதம் பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று. அதற்கு ஏன் எங்கிட்ட வருகிறீர்கள், பெரியார் திடலில் வீரமணி இருப்பாரு அவர்கிட்ட போ என்றாராம்.

அங்கேயிருந்து வந்தார் அந்த நடிகர்.

என்ன விஷயம் என்று ஆசிரியர் கேட்டார். 

எங்களுக்கு 10 சதவீதம்....

ஏன்யா, 1928இலே முத்தையா முதலியார் கொண்டு வந்தாரே அந்த இடஒதுக்கீடு சட்டத்திலே, உங்களுக்கு 14 சதவீதம் கொடுத்தார். அதை எதிர்த்து நீங்கள் கோர்ட்டுக்குப் போனீங்க இல்ல, இப்ப 10 சதவீதத்துக்கு வந்து நிக்கிறீங்கன்னு கேட்டாரு.

இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுங்க.

இப்ப தெரிஞ்சுக்கங்க என்றார் ஆசிரியர்.

பார்ப்பனர்களுக்கு இப்ப சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது ணிகீஷி என்பது அதுதான். வேறொன்றுமில்லை.

உச்சநீதிமன்றம் சொல்லுது 50 சதவீதத்துக்கு மேலே இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று.

ணிகீஷிக்கு 10 சதவீதம் கொடுத்திருக்கியே, அப்ப 60 சதவீதம் ஆகிறது இல்லையா.

எப்படி கொடுக்கலாம் என்று கேட்டால், நீதிமன்றமும் கேட்கமாட்டேங்குது, அரசாங்கமும் கேட்கமாட்டேங்குது.

ஆகவே, பார்ப்பனர்கள் என்றாலே சூழ்ச்சிதான்.

திட்டமிட்டு நம்முடைய மக்களை பழிவாங்குவதுதான்.

2010இல் நீட் வந்தது என்றார்கள். மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா அதுதான் பரீட்சை நடத்துகிறது.

உச்சநீதிமன்றத்தில் ஷார்ப்பா ஒரு கேள்வி கேட்டார்கள், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு பரீட்சை நடத்த தகுதி உண்டா? ஹ்ஷீu லீணீஸ்மீ ஸீஷீ க்ஷீவீரீலீt. உன் வேலை நிர்வாகத்தை பார்ப்பது என்றார்கள்.

பரீட்சை நடத்துவது உன்னுடைய வேலை இல்லை என்று உச்சநீதிமன்றம் ஆழமாக குத்திவிட்டது.

அதற்கப்புறம். சீராய்வு மனு போட்டது யாரு?

பொய்யை திரும்பத் திரும்ப பிஜேபியினர் சொல் கிறார்கள் - காங்கிரசுதான் என்று. சீராய்வு மனு போட்டதா? மோடி தலைமையிலான பிஜேபி அரசு. இவ்வளவு வேலையை செய்துவிட்டு, பிஜேபி என்ன செய்கிறது?

தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் பிஜேபி தவிர எல்லாக் கட்சியும் திமுக கொண்டு வந்த நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டன.

பிஜேபி தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. இது ஒன்று போதும்.  ஆனானப்பட்ட எம்ஜிஆரே, 9000 ரூபாய் வருமான வரம்பு கொண்டு வந்து, 39 இடத்தில் நின்று, 37 இடத்திலே தோற்றார். அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இரண்டொரு கட்சி பேசியபிறகு, டக்குன்னு எம்ஜிஆர், வீரமணி மட்டும் பேசட்டும் என்றார். 

ஆதாரத்தோடுதான் ஆசிரியர் பேசுவார். எல்லாருக்கும் ஆதாரத்தைக் கொடுத்து, 40 நிமிடம் பேசினார்.

ஒரு கேள்வி கேட்டார், செங்கல்பட்டிலே ஒரு கடைநிலை ஊழியர் பியூன் அரசாங்கத்தில 8990ரூபாய் வாங்குகிறார். அதே பியூன் சென்னைக்கு மாற்றல் ஆனால், அப்போது அவருடைய சம்பளம் 9100 ரூபாய் சிட்டி அலவன்சு உள்ளிட்டவை சேர்ந்து.

ஒரு ஆளு செங்கல்பட்டில இருந்து சென்னைக்கு வந்தா ஃபார்வார்டா? என்றார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை எம்ஜிஆர் சந்தித்தார். ஏன் இந்த அவசரக் கூட்டம் என்று கேட்டதற்கு, 

தேர்தலில் நிற்காத ஒரு கட்சி, ஒரு தலைவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்து, என்னுடைய ஆட்சி இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி என்று பிரச்சாரம் செய்து நம்பவைத்துவிட்டார் என்றார்.

அரசியலுக்கு போகாத கட்சி எது?

அந்த தலைவர் யார்?

அப்போது எம்ஜிஆரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன், அரசமைப்புச் சட்டத்தில் ஷிஷீநீவீணீறீறீஹ் ணீஸீபீ ணிபீuநீணீtவீஷீஸீணீறீறீஹ் ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ என்றுதானே இருக்கிறது, சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு, எக்கானமிக்கல் இல்லை. நீங்கள் எப்படி புதுசா கொண்டுவந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆர், யார் சொன்னது?  அப்படி இருக்கு என்றார். அடுத்து நான் ஒரு கேள்வியைக் கேட்டேன், ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ சிறீணீss, ஷிலீமீபீuறீமீபீ சிறீணீss என்று பட்டியல் போட்டுள்ளீர்கள், இது ஏழை, பணக்காரன் பட்டியலா, ஜாதிப்பட்டியலா? என்றேன்.

ஆ... இது வீரமணிக்குத்தான் தெரியும். அவரைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். செய்தியாளர்கள் கூட்டம் முடிந்துவிட்டது. அடுத்த ஒரு வாரத்தில் தோழர்களே, அந்த வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்பட்டதோடு, 31 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 50சதவீதமாக அறிவிக்கப்பட்டது. திராவிடர் கழகம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தியது.

நீட் வருவதற்கு முன் தமிழ்நாடு அரசு மேநிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கிடைத்த மருத்துவ இடங்கள் 30. நீட் வந்தபிறகு 5 இடங்கள்தான்.  இதற்கு பெரிய விளக்கமெல்லாம் தேவையில்லை. இந்த விவரத் தைச் சொன்னாலே யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், யார் பலனடைந்திருக்கிறார்கள் என்று தெரியும்.

2011-2016இல் நீட்டுக்கு முன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைத்த மருத்துவ இடங்கள் 510. நீட்டுக்குப்பின் 62 இடங்கள். தமிழ்வழியில் படித்தவர்கள் நீட்டுக்கு முன்னால் 510, நீட்டுக்குப்பின்னால் 68.

சிபிஎஸ்இ படித்தவர்கள் நீட்டுக்கு முன்னால் 52, நீட்டுக்கு பின்னால் 1220. இருபது மடங்கு அதிகம். இப்போது புரிகிறதா? நீட் எதற்காக கொண்டு வரப்பட்டது?  யாரை நசுக்குவதற்காக கொண்டுவரப்பட்டது?

யாரைத் தூக்கிவிடுவதற்காக கொண்டுவரப்பட்ட தென்று? நினைத்துப்பார்க்கவேண்டும்.

ணிகீஷி இல் மாதம் ரூ.66,000 சம்பளம் வாங்குபவன் உயர்ஜாதி பார்ப்பானாக இருந்தால் அவன் ஏழையாம்.

அதிமுக மாநாட்டுத் தீர்மானத்தில் நீட் இல்லை. இவ்வளவுக்கும் அவர்களின் நீட்டை எதிர்த்து மசோதா நிறைவேற்றி இருக்கிறீர்களா இல்லையா?

திமுக கொண்டு வந்த நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தீர்களா? இல்லையா?

பிஜேபியுடன் சேர்ந்து நீங்களும் அழியப்போகிறீர்கள் அவ்வளவுதான். பிஜேபியுடன் சேர்ந்த குற்றத்தால் அதிமுகவும் துடைத்து அழிக்கப்படும்.

திராவிடர் கழகத்துக்கு கட்சி அரசியல் கிடையாது. தமிழன் வீட்டுப் பிள்ளைகள் டாக்டர்கள் ஆக வேண்டும் இல்லையா?

நீட் ஒரு சூழ்ச்சித்திட்டம். ஆர்.எஸ்.எஸ். கொள்கையே இடஒதுக்கீட்டை ஒழிப்பதுதான்.

இடஒதுக்கீட்டை ஒழிக்கவே, 'நீட்' என்கிறான். 'ணிகீஷி'  என்கிறான்.

ஆகவே, நீட் பார்ப்பன சூழ்ச்சி என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

- இவ்வாறு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

பங்கேற்றோர்

தே.செ.கோபால், ந.கரிகாலன், ப.முத்தையன், கோ.நாத்திகன், தி.இரா.இரத்தினசாமி, பொழிசை கண்ணன், கண்ணதாசன், பம்மல் கோபி, கு.சோமசுந்தரம், ஊரப் பாக்கம் இரா.உத்திரகுமாரன், இராமண்ணா, சீ.லட்சுமிபதி, சண்முகபிரியன், வடசென்னை சு.அன்புச்செல்வன், யுவராஜ், மா.இராசு. ஆனந்தன், வைத்தியலிங்கம், மு.மணி மாறன், குன்றத்தூர் திருமலை, அம்பத்தூர் சோபன்பாபு, தங்கமணி, இராமாபுரம் ஜெ.ஜெனார்த்தனம், பாஸ்கர், பி.சி.ஜெயராமன், வேலூர் பாண்டு, தமிழினியன், பொய்யா மொழி, செல்லப்பன், புகழ், பாலமுரளி, பா.கோபவன், சித்தார்த்தன், கலைமணி, தங்கமணி, பழநிசாமி, சந்திரசேகர், எஸ்.ஆர்.வெங்கடேஷ், மா.குணசேகரன், செ.ர.பார்த்த சாரதி, தேவசகாயதாஸ், ராகுல், மா.அறிவழகன், ஆலந்தூர் சிவா, அயன்புரம் துரைராஜ், நடராஜ், கஜேந்திரன், வெற்றிவீரன், சேகர், உடுமலை வடிவேல், எம்.டிசி.பாபு, தனசேகர், ராகுல், தாம்பரம் மோகன்ராஜ், காரைக்குடி சாமி. திராவிடமணி, ஜெயா திராவிடமணி, டார்வின் தமிழ், பா.கவிமலர் மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment