குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றி ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றி ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 26 -  மூன்று குற்ற வியல் சட்டங்களின் பெயர்களையும், சட்டப் பிரிவுகளையும் மாற்றம் செய்து மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை ஹிந்தி மொழியில் மாற்றம் செய்தும், இந்திய சட்டப் பிரிவுகளில் மாற்றம் செய்தும் ஒன்றிய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது. இதற்கு நாடெங் கிலும் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்றங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் இந்த செயலை கண்டித்தும் அந்த சட்ட மசோதாவை திரும்பத் பெற வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பு,  ஜனநாயக வழக்குரைஞர்கள் மய்யம், உயர் நீதிமன்ற வழக்குரை ஞர்கள் சங்கம் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று (25.8.2023) ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.கிரிராஜன், வழக் குரைஞர்கள் அ.அருள்மொழி, விஜயகுமார், பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் உள்ளிட் டோர் தலைமை தாங்கினர். 

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான வழக்குரைஞர்கள் பங் கேற்றனர். அப்போது, ‘இந்தியா’ என்ற பெயரில் வெறுப்புணர்வை காட்டவே ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது அரசமைப்புக்கு எதிரா னது என்று வழக்குரைஞர்கள் கண்டனக் குரல் எழுப்பினர். 

அப்போது திமுக நாடாளு மன்ற உறுப்பினர் இரா.கிரிராஜன் பேசும்போது, ஏற்கெனவே தமிழ் நாடு -புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தொடர் முழக்க போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகப் பழமையான வழக்குரைஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோ சியேசனும் மூன்று சட்டங்களின் பெயரை மாற்றி மறுசீரமைக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராக கண் டனத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 

இந்த மசோதாவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

No comments:

Post a Comment