உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா-முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா- திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா-முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா- திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

உரத்தநாடு, ஆக. 5- உரத்த நாடு ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில், வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமி ழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் 3.8.2023 அன்று மாலை 6 மணியளவில், உரத்தநாடு சைவமடத் தெருவில்,   உரத்தநாடு நகர துணைத் தலைவர் மு.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், ஒன்றிய செயலாளர் மாநல்.பரம சிவம், ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகி யோர் முன்னிலையேற்று உரையாற்றினர். மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல் கருத்துரை யாற்றினார்.

தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி தொடக்கவுரை யாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் சைவமடத் தெருவில் கழக கொடியினை ஏற்றிவைத்து கொள்கை விளக்கவுரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார்.

கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் உரையில், நூறு ஆண்டுகளுக்கு மேனாள் கேரள மாநிலம் வைக்கத்தில் நிலவிய ஜாதி இழிவையும், அதனை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டத் தினையும், தந்தை பெரியார் கைதான பிறகு அவரது மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் போராட்டத்தினை முன்னெடுத்து வெற்றி பெற்றதை விளக்கியும், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான ஆட்சியாக நடை பெற்று வரும் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், மூடபழக் கங்களை ஒழிக்கின்ற வகையில் ‘பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்' என்ற தந்தை பெரியாரின் கொள்கையை விளக்கியும் நகைச்சுவை கலந்த சிந்திக்ககூடிய கருத்துகளை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் முக்கரை க.சுடர்வேந்தன் மூடநம்பிக்கை களை முறியடிக்கின்ற வகையில் மந் திரமா? தந்திரமா? எனும் அறிவியல் நிகழ்ச்சியினை நடத்தி விளக்கமளித்தார். உரத்தநாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார், மாநில வீரவிளையாட்டு கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிக்கண்ணு, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், ஒன்றிய ப.க. தலைவர் கு.நேரு, ஒன்றிய விவசாயணி தலைவர் மா.மதியழகன், உரத்தநாடு ஒன்றிய கிழக்குப் பகுதி செயலாளர் துரை. தன்மானம், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இள வரசன், உரத்தநாடு நகர துணைச் செயலாளர் இரா.இராவணன், நகர இளைஞரணி துணை செயலாளர் க.மாதவன், ஒக்கநாடு தோழர்கள் வீரத்தமிழன், சக்தி, ராஜீவ்காந்தி, விஜய், பொறி யாளர் பாலகிருஷ்ணன், மண்டலக்கோட்டை சுரேந்திரன், நெடுவை கு.லெனின், பெரியார் நகர் சக்திவேல், வெள்ளூர் மெய்யழகன், வன்னிப்பட்டு செந்தில், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கக்கரை மனோகரன், திமுக தோழர்கள் சிட்டிபாபு, ஜெயராமன், ஊரச்சி நடராஜன், ஒக்கநாடு ஒன்றிய குழு உறுப்பினர் துரைராசு, அய்யப்பன், வார்டு செயலாளர் சரவணன், கொத்தனார் கருப்பையன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். சைவமடத் தெருவில் வசிக்கும் தெருவாசி கள் தங்கள் வீடுகளின் முன்புறம், மாடிகள் போன்ற இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பொதுக் கூட்ட பிச்சாரத்தைக் கேட்டு மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment