முதலமைச்சரின் சீரிய திட்டங்களால் பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

முதலமைச்சரின் சீரிய திட்டங்களால் பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

இரா­ம­நா­த­பு­ரம்,ஆக.19- இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம், உச்­சிப்­புளி அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் நேற்று (18.08.2023) பொது சுகா­தா­ரம் மற்­றும் நோய் தடுப்பு துறை­யின் மூலம் புதி­தாக கட்டப் பட்ட துணை சுகா­தார நிலை­யங்­கள், வெளி நோயா­ளி­கள் பிரிவு, செவி­லி­யர் குடி­யி­ருப்பு மற்­றும் கண் அறுவை சிகிச்சை அரங்­கம் திறப்பு விழா நிகழ்ச்சி நடை­பெற்­றது. 

இந்­நி­கழ்ச்­சி­யில் இராமநாதபு­ரம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கே.நவாஸ்­கனி முன்­னிலை வகித்­தார். 

மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்பிர­ம­ணி­யன் தலை­மை­யேற்று புதிதாக கட்­டப்­பட்ட மருத்­து­வக் கட்­ட­டங்­களை திறந்து வைத்து பேசுகை­யில் குறிப்­பிட்­டதா­வது:

முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் சீரிய திட்­டங்­க­ளால் தமிழ்நாடு பொது சுகா­தா­ரத்­து­றை­யில் முதன்மை மாநி­ல­மாக இருந்து வரு­கி­றது. இது மட்­டு­மின்றி பல்­வேறு திட்­டங்­களை மக்­க­ளின் தேவை­களை உணர்ந்து செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. 

அதி­லும் குறிப்­பாக மக்­களை தேடி மருத்­து­வம், இன்னுயிர் காப்­போம், கலை­ஞர் வரு­முன் காப்­போம் போன்ற திட்­டங்­கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்­றுள்­ளன. 

தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உத்­த­ர­வு­கி­ணங்க இரா­மநா­த­பு­ரம், பர­மக்­குடி பகுதி­யில்  1 கோடி மதிப்­பீட்­டில் நகர்ப்­புற நல­வாழ்வு மய்யங்­கள் கட்­டப்­பட்டு மக்­கள் பயன்­பாட்­டிற்கு இருந்து வரு­கி­றது.

இரா­ம­நா­தபு­ரத்­தில் நகர்ப்­புற ஆரம்ப சுகா­தார நிலை­யம் அமைக்க வேண்டி சட்­ட­ மன்ற உறுப்­பி­னர் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்க ரூ1.20 கோடி மதிப் பீட்டில் கட்­டு­மான பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. 

இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்தை பொறுத்­த­வரை 267 துணை சுகாதார நிலை­யங்­கள், 59 ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள், 2 வட்டம் சாரா மருத்துவமனை­கள், 7 வட்­டார மருத்­து­வ­ம­னை­கள், 1 மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை, 1 மண்டல மன­நல மருத்­து­வ­மனை இருந்து வரு­கி­றது. இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் எய்ம்ஸ் மருத்து­வக்­ கல்­லூரி சிறப்­பான முறை­யில் செயல்­பட்டு வரு­கின்­றது. 

இப்­ப­கு­தி­யில் உள்ள மாணவ, மாண­வி­கள் நன்றாகப் படித்து எய்ம்ஸ் மருத்­து­வக்­கல்­லூ­ரி­யில் படிக்­கும் நிலையை உரு­வாக்­கிக் கொள்ள வேண்டும்.

முத­ல­மைச்­சர் அவர்­கள் மானி­யக்­ கோ­ரிக்­கை­யில் இத­யம் காப்­போம் திட்­டம் துவங்க உத்தரவிட்டு அனைத்து அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளி­லும் இரு­தய பாது­காப்பு சிகிச்சை வழங்கப் பட்டு வரு­கி­றது. இதன் நோக்­கம் மார­டைப்பு நோயை கட்­டுப்­ப­டுத்தி பாது­காப்­பதே ஆகும். 

தற்­பொ­ழுது இத்­திட்­டத்­ தினால் கிராம பகு­தி­யில் இ­த­யம் பாது­காப்பு சிகிச்­சைக்கு நாள்­ தோறும் மக்கள் சென்று மருத்­து­வ­ரி­டம் ஆலோ­சனை பெற்று வரு­வ­து­டன் நெஞ்சு வலி உள்ள நபர்­க­ளுக்கு அப்­பொ­ழுது கொடுக்க வேண்­டிய 14 வகை மாத்­தி­ரை­கள் உட­ன­டி­யாக வழங்­கப்­ப­டு­கி­றது.

இதன் மூலம் மார­டைப்பு தடுக்­கப்­பட்டு பாது­காக்­கும் நிலை உரு­வா­கி­றது. 

இதே போல் அனைத்து அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளி­லும் நாய் கடிக்­கான தடுப்­பூசி வழங்­கப்­ப­டு­கி­றது. இதே போல் கண் அறுவை சிகிச்­சைக்­கும் உரிய மருத்­துவ சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.

இவ்­வாறு மக்­க­ளின் தேவைக்­கேற்ப மருத்­துவ சிகிச்­சை­கள் உட­னுக்­கு­டன் வழங்­கி­டும் வகை­யில் அனைத்து மருத்து வம­னை­க­ளும் போதிய உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளு­டன் சிறப்­பாக செயல்­பட்டு வரு­கின்­றன. பொது­மக்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

-இவ்­வாறு மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரிவித்தார்.

முன்­ன­தாக மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் உச்­சிப்­புளி அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் ரூ.60 இலட்­சம் மதிப்­பீட்­டில் புதி­தாக கட்­டப்­பட்ட வெளி நோயாளர் பிரிவு, மண்­ட­பத்­தில் ரூ.25 இலட்­சம் மதிப்­பீட்­டில் செவி­லி­யர் குடி­யி­ருப்பு, மண்­ட­பம் கேம்­பில் ரூ.24 இலட்­சம் மதிப்­பீட்­டில் துணை சுகா­தார நிலை­யம், காந்­தி­ந­க­ரில் ரூ.20 இலட்­சம் மதிப்­பீட்­டில் துணை சுகா­தார நிலை­யம், சூசை­யப்­பர் பட்­டி­னத்­தில் ரூ.20 இலட்­சம் மதிப்­பீட்­டில் துணை சுகா­தார நிலை­யம், மூக்­கை­யூ­ரில் ரூ.25 இலட்­சம் மதிப்­பீட்­டில் துணை சுகா­தார நிலை­யம், இரா­ம­சாமி பட்­டி­யில் ரூ.25 இலட்­சம் மதிப்­பீட்­டில் செவி­லி­யர் குடி­யி­ருப்பு, பர­மக்­கு­டி­யில் ரூ.60 இலட்­சம் மதிப்­பீட்­டில் கண் அறுவை சிகிச்சை கட்­ட­டம் என மொத்­தம் ரூ.2.59 கோடி மதிப் பீட்டில் புதி­தாக கட்­டப்­பட்ட கட்­ட­டங்­களை மக்­கள் பயன்­பாட்­டிற்­காக திறந்து வைத்­தார்.

கர்ப்பிணி­க­ளுக்கு ஊட்­டச்­சத்து பரிசு பெட்­ட­கம்

அத­னைத் தொடர்ந்து டாக்­டர் முத்­து­லட்­சுமி ரெட்டி மகப்­பேறு நிதி­யு­தவி திட்­டத்­தின் கீழ் 25 கர்ப்பிணி­க­ளுக்கு ஊட்­டச்­சத்து பரிசு பெட்­ட­கத்­தினை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் வழங்கி­னார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் மாவட்ட வரு­வாய் அலு­வ­லர்  இரா.கோவிந்­த­ரா­ஜன், பர­மக்­குடி சார் ஆட்­சி­யர் அப்­தாப் ரசூல், பொது சுகா­தா­ரத்­துறை துணை இயக்­கு­நர்­கள் மரு.அர்­ஜூன் குமார் (இராமநாத புரம்), மரு.இந்­திரா (பர­மக்­குடி), மருத்­துவ இணை இயக்­கு­நர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவா­னந்­தம், மண்­ட­பம் ஊராட்சி ஒன்­றி­யக் குழுத்­த­லை­வர் சுப்­பு­லட்­சுமி ஜீவானந்­தம் மற்­றும் அரசு அலு­வ­லர்­கள் உட்­பட பலர் கலந்­து­கொண்­ட­னர்.

No comments:

Post a Comment