செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

செய்திச் சுருக்கம்

நூலகர் பணி

நிதியாளர் பதவி, ஒருங்கிணைந்த நூலகப் பணி தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர் வாணையம் வெளியிட்டுள்ளது.

வரி ஏய்ப்பு...

2022-2023 நிதியாண்டில் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் எச்சரித்துள்ளார்.

ரயில் சேவை

சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை சாத்தியக் கூறு ஆய்வறிக்கை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளதால் இம்மாத இறுதியில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல்.

முன்தேதியிட்டு...

ஏலம் மூலம் வாங்கிய சொத்துகளுக்கான விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நெறிமுறைகள்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத் துடன் இணைப்பு ‘அந்தஸ்து' பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ளது.

துறைமுகம்

சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தகவல்.

உதான் திட்டத்தில்...

நாடு முழுவதும் உள்ள சிறு நகரங்களில் விமான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க 2016 அக் டோபர் 21ஆம் தேதி ஒன்றிய அரசால் தொடங்கப் பட்ட உதான் திட்டத்தில் 7 சதவீதம்தான் வெற்றி என்று ஒன்றிய தணிக்கை அறிக்கை தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment