பால் உற்பத்திப் பொருட்களுக்கு முழு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க முடியாதாம்! மாநிலங்களவையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

பால் உற்பத்திப் பொருட்களுக்கு முழு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க முடியாதாம்! மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி, ஆக.5 - பால் உற்பத்திப் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன் சிலிடமிருந்து எந்தப் பரிந்துரையும் வரவில்லை. எனவே  முழு வரிவிலக்கு தர வாய்ப்பில்லை  என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

“பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களுக்கு விதிக்கப்படக் கூடிய  ஜிஎஸ்டி வரி குறித்தான  விவரங்கள் என்ன? ஊட்டச்சத்தில் முதன்மை இடம்  வகிக்கும்  பால் பொருட்களுக்கு முழு மையான வரிவிலக்கு அளிக்கத் திட்டம் இருக்கிறதா? பால் உற்பத்தி யாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி தரும்  திட்டம் இருக்கிறதா?’ என நாடாளு மன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு  கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு “பால் மற்றும் பதப்படுத்தப் பட்ட பாலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பி லிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் உற்பத்திப் பொருட்களான தயிர், மோர்,  லஸ்ஸி, பன்னீர் போன்றவை வணிக  முத்திரை இல்லாமலும்  பிற  வடிவங்களிலும்  விற்கப்படும் போது அவற்றிற்கு வரி விதிப்பதில்லை. 

பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் போதும் கூட இந்த பொருட்களுக்கு 5 சதவிகிதம் வரிச் சலுகையும் அளிக்கப்படுகிறது.கெட்டிப்படுத்தப்பட்ட பால், வெண் ணெய், நெய் பாலாடைக் கட்டி  போன்ற வற்றுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறை கள் நாடு முழுக்க ஒரே மாதிரி அமல் படுத்தப்படுகிறது” என்று  ஒன்றிய  நிதித்துறை இணை யமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்துள்ளார்.

மேலும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் அடங்கிய அரசமைப்பு அதிகாரம் பெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப்படியே இந்த வரி விகி தங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பால் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தக் கவுன்சிலிடமிருந்து எந்தப் பரிந் துரையும் வரப்பெறவில்லை. எனவே, வரிவிலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

குழந்தைகள், பெண்கள் என அனை வருக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும் அடிப்படை உணவுப் பொருட் களாக பால் மற்றும்  பால் உற்பத்தி  பொருட்கள் உள்ளன.  அப்பொருட்கள் மீதான அதிக வரி உள்ளிட்டவற்றின்  காரணமாக வறுமை நிலையில் உள்ள குடும்பங் களால் போதுமான அளவு ஊட்டச்சத்துக் களை பெறும் வகையில் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள  முடிவதில்லை.

மேலும் இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியில் அதிகப்படி யான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குடும்ப நல ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பால் பொருட்களுக்கு முழுமையாக வரிவிலக்கு தர மறுக்கும் பாஜகவின் செயல்பாடு  நாடு முழுவதும் ஊட்டச் சத்துக் குறைபாட்டை மேலும் அதிகரித்து மோசமான சூழலுக்கே தள்ளும்.

No comments:

Post a Comment