பரனூர் சுங்கச்சாவடி நவீன ஊழலின் அடையாளம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

பரனூர் சுங்கச்சாவடி நவீன ஊழலின் அடையாளம்!

வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் பெரும் மோசடி!

சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம்!

செங்கல்பட்டு, ஆக. 31- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏழரை லட்சம் கோடிக்கான ஏழு ஊழல்களை அம் பலப்படுத்தி, பெரும் பூகம் பத்தை உருவாக்கியுள்ளது சி.ஏ.ஜி.. அதில் ஒன்று சுங்கச்சாவடி ஊழல். 

சுங்கச்சாவடிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலை களில் உள்ள சுங்கச் சாவடிகள். இரண்டாவது, தனியார் பணத் தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள்.

செங்கல்பட்டு -பரனூர் சுங்கச் சாவடி, பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி யாகும். அதன் வழியாக 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2020 ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 1 கோடியே 17 லட்சத்து 8 ஆயிரத்து 438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. ஒரு கோடிக்கும் அதிகமான வாக னங்கள் பயணித் துள்ளன. இவற் றில் 62 லட்சத்து 37 ஆயிரத்து 152 வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் சென்ற முக்கிய பிரமுகர்களின் வாகனங்களாகும். 

பரனூர் சுங்கச்சாவடி மட்டுமல்ல. பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட ஆத்தூர் சுங்கச்சாவடியில் 36 சதவீதம். 2020 ஜனவரி மாதம் முதல் 2020 செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் கப்பலூர் சுங்கச் சாவடியில் 25 சதவீதம், லம்பால குடி சுங்கச்சாவடியில் 18 சதவீதம் என முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் கட்டணம் செலுத் தாமல் பயணித்துள்ளன.

ஆனால் தனியார் சுங்கச் சாவடியில் இந்த கணக்கு தலை கீழாக உள்ளது. செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 2020 ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை கடந்து சென்ற வாகனங்கள் 49 லட்சத்து 77 ஆயிரத்து 901. அவற்றில் கட்டணம் கட்டாத முக்கிய பிரமுகர்களின் வாக னங்கள் 12.60 சதவீதம். கணியூர் சுங்கச்சாவடியில் 11 புள்ளி 12 சதவீதம். வேலன் செட்டியூர் சுங்கச்சாவடியில் 7 புள்ளி 13 சதவீதம். பாளையம் சுங்கச்சாவடி யில் 6 புள்ளி 93 சதவீதம். வைகுண்டம் சுங்கச்சாவடியில் 6 புள்ளி 76 சதவீதம். கொடை ரோடு சுங்கச்சாவடியில் 6 புள்ளி 6 சதவீதமாகும்.

பொதுப்பணத்தில் அமைக் கப்பட்ட சாலையான பரனூர் சுங்கச்சாவடியில் 53 சதவிகிதம் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்கிறார்கள். அதுவே தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட கொடைரோடு சுங்கச்சாவடியில் 6 சதவிகிதம் தான் என்றால் எவ்வளவு பெரிய முறைகேடு அரங்கேறி இருக்கிறது. ஆனால் முக்கிய பிரமுகர்கள் சென் றார்கள் என்பதற்கு எந்த ஆதா ரமும் சேகரிக்கப்படவில்லை. பதிவுகள் கூட செய்யப்படவில்லை என சி.ஏ.ஜி அறிக்கை சொல்கிறது.

ஆனால் பரனூர் சுங்கச்சாவடி பாலம் ஒன்றின் வழி பயணத்திற்கு 2018 முதல் 2021 வரை 22 கோடியே 10 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை. பரனூர் சுங்கச்சாவடி, சி.ஏ.ஜி. அறிக்கையால் பலவகை யிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுங்கச் சாவடியாக மாறியுள்ள தாக சாடியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உலகத்திலேயே 50 சதவிகித முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் பெருமை கொண்ட பரனூர் டோல்கேட்டை, நவீன ஊழலின் அடையாளமாக “பா.ஜ.க. மாடல் டோல் கேட்” என்றே அழைக்கலாம் என விமர்சித்துள்ளார்.


No comments:

Post a Comment