அறநிலையத்துறையின் கீழ் வள்ளலார் அருள் மாளிகை: உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

அறநிலையத்துறையின் கீழ் வள்ளலார் அருள் மாளிகை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 14 - விழுப்புரத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலரான அண்ணாமலை, உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில் எங்கள் நிறுவனத்தை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து, உத்தரவு பிறப்பித்தது.

 அதைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோவில் நிர்வாக அதிகாரியை, தக்காராக நியமித்தனர். இதை எதிர்த்து, விழுப்புரத்தில் உள்ள அறநிலையத்துறை இணை ஆணை யரிடம் அளித்த மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

பின், அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தோம். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

எங்கள் நிறுவனம், ஹிந்து மத நிறுவனம் அல்ல என அறிவிக்கக் கோரி, இணை ஆணையரிடம் மனு அளித்தோம். அந்த மனு கடந்த மாதம் 3ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, ஆணை யரிடம் மேல் முறையீடு செய்ய, 60 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்நிலையில், எங்கள் மடத்தை வலுக்காட்டயமாக எடுக்க, உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரது உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை, அறக்கட்டளையின் விவகாரத்தில் குறுக்கிட, அறநிலையத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன், விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் அருள் மாளிகையை   அறநிலையத்துறை எடுத்ததில் எந்த விதி மீறலும் இல்லை. ஆகவே இனி அறநிலையத் துறை ஆணையரை அணுகிக் கொள்ள அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment