நாங்குநேரி: சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவருக்கு சென்னையில் இருந்து சென்று சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 15, 2023

நாங்குநேரி: சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவருக்கு சென்னையில் இருந்து சென்று சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை

திருநெல்வேலி, ஆக. 15-  திருநெல் வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவரின் 2 கைகளிலும் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை 3 மணிநேரம் மேற்கொள்ளப்பட்டது. 

சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையிலிருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவக் குழுவினர் இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகர மாக செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பள்ளி மாணவர் சக மாண வர்களால் கடந்த 9ஆ-ம் தேதி இரவில் வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதை தடுத்த அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 

அவர்கள் இருவரும் திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப் பட்ட மாணவருக்கு இரண்டு கைகள், கால்கள், தலை உள்பட 8 இடங்களில் வெட்டுக்காயம் ஏற் பட்டது. இதுபோல் அவரது தங்கைக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதல மைச்சர் உத்தரவிட்டிருந்த நிலை யில் சென்னை ஸ்டான்லி மருத்து வமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் சிறீதேவி தலைமையில் மருத்துவர்கள் மகேஷ், சிறீதர் அடங்கிய குழுவி னர் திருநெல்வேலி அரசு மருத்து வமனைக்கு வந்தனர். 

பாதிக்கப்பட்ட மாணவரை பரிசோதித்து, அவருக்கு ஒட்டு றுப்பு அறுவை சிகிச்சை செய்தனர். 3 மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக சிறப்பு மருத்துவ குழுவினரும், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதிபாலனும் தெரிவித்தனர்.

அவர்கள் கூறும்போது, "மாண வரின் உடலில் பல இடங்களில் காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. எலும்பு முறி வுக்கு முதல்கட்ட அறுவைச் சிகிச்சை ஏற்கெனவே அளிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து 2 கைகளிலும் ஏற்பட்ட காயத்தை ஆய்வுசெய்து உரிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

தசை நார்கள், ரத்த குழாய்கள் நரம்புகள் காயம்பட்டிருந்தது. அவற்றை இணைக்கும் பணிகள் நடைபெற்றது. இடது கையில் 3 இடத்தில் வெட்டுக் காயம் வலது கையில் ஒரு இடத்தில் வெட்டுக் காயம் உள் ளது. 

மொத்தம் 7 முதல் 8 இடங் களில் வெட்டுக் காயம் உள்ளது. மருத்துவ நிபுணர் குழுவினர் தொடர்ந்து மாணவனை கண் காணித்து வருகின்றனர். குறைந்த பட்சம் 4 வாரம் மாணவருக்கு ஓய்வு தேவை. 4 வாரம் மாவு கட்டில்தான் இருப்பார். 

அதன்பிறகே ஒட்டுறுப்பு சிகிச் சையின் அடுத்த கட்ட நிலை தெரிய வரும். மாணவனின் தங்கை நன்றாக உள்ளார். அவருக்கு தசை நார் மட்டும் உருவி இருந்தது. மாணவன் மனநிலை கலந்தாலோச னைக்குப் பின் பிறகு நன்றாக இருக்கிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment