இளம் மாணவர்களிடம் கூட ஜாதிய நச்சு! இந்நிகழ்வு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு முதலமைச்சர் வேதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

இளம் மாணவர்களிடம் கூட ஜாதிய நச்சு! இந்நிகழ்வு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு முதலமைச்சர் வேதனை

சென்னை, ஆக. 12 - “நாங்குநேரி நிகழ்வு நடுக்கத்தை ஏற்படுத்து கிறது. இளம் மாணவர்களிடம் கூட ஜாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்குநேரியில் நடந்த நிகழ்வு நடுக்கத்தை ஏற்படுத் துகிறது. இளம் மாணவர்களிடம் கூட ஜாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் ஜாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் நிகழ்வில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருக்கிறார். குற்ற நிகழ்வில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதேநேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல் லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். 

குறிப்பாக ஆசிரியர் சமூக மானது, இது போன்ற நன்நெறி களை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

வெறுப்பு மனம் கொண்டவர் களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! 

நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment