நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

நடக்க இருப்பவை

 18.8.2023 வெள்ளிக்கிழமை
மதுரை பெரியார் மணியம்மையார் மன்றத்திற்கு (செனாய் நகர்) 
நிதி வழங்கும் விழா

மதுரை: காலை 10:00 மணி ⭐ இடம்: ஆர்த்தி தங்கும் விடுதி, மதுரை ⭐  மதுரை, ஷெனாய் நகரில் உள்ள பெரியார் மணியம்மையார் மன்ற கட்டுமானப் பணிக்காக மதுரை பெரியார் பெருந்தொண்டர், காப்பாளர், உழைப்பால் உயர்ந்த சோலையழகுபுரம் சே.முனியசாமி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.10,00,000 (ரூபாய் பத்து லட்சம்) வழங்க இருக்கின்றார்கள் ⭐  இந்நிகழ்விற்கு கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் ⭐  குறிப்பு: நிதி யளிப்பில் இணைந்து கொள்ள விரும்பும் நன்கொடையாளர் களை வரவேற்கின்றோம்⭐  அன்புடன்: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்).

19.8.2023 சனிக்கிழமை
தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் 
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: காலை 10:00 மணி ⭐  இடம்: தூத்துக்குடி  பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடி ⭐  தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) ⭐  வரவேற்பு: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) ⭐  முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (கழகக் காப்பாளர்), சு.காசி (கழக காப்பாளர்) ⭐  விளக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ⭐  கருத்துரை: கழகத் தோழர்கள் ⭐  பொருள்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது, தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாள் (செப்டம்பர் 17) கொண்டாடுவது பற்றிக் கருத்துக் கேட்டல்⭐  விழைவு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணித் தோழர்களும், பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் தவறாது வருகை தர வேண்டுகிறோம் ⭐  நன்றியுரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) ⭐  ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.

20.8.2023 ஞாயிற்றுக்கிழமை
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் (ஆக.20) தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ⭐  இடம்: பெரியார் இல்லம், கீழராசவீதி, தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: சி.நாகநாதன் (திருவோணம் ஒன்றிய அமைப்பாளர், ப.க.) ⭐  தலைமை: ச.அழகிரி (தஞ்சை மாவட்ட தலைவர், ப.க.) ⭐  முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர், திராவிடர் கழகம்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), தங்க.வெற்றி வேந்தன் (தஞ்சை மாவட்ட ப.க. துணைச் செயலாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) ⭐  தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், ப.க.) ⭐  சிறப்புரை: பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் (இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், தஞ்சாவூர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐  தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்! அறியாமை அகற்றுவோம்! ⭐  டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திறப்பாளர்: முனைவர் த.அனுராதா (இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் ⭐  நன்றியுரை: குழந்தை கவுதமன் (தஞ்சை மாவட்ட ப.க. அமைப்பாளர்) ⭐  வேண்டல்: தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் ⭐  அன்புடன் அழைக்கும: பாவலர் பொன்னரசு (மாவட்டச் செயலாளர்).

பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி நடத்தும் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம்

பெரம்பலூர்: காலை 10:30 மணி ⭐  இடம்: பெரம்பலூர் அரசு அலுவலர் ஓய்வு பெற்றோர் சங்க கட்டடம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் ⭐  வரவேற்புரை: கு.நவநீதிச் சோழன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) ⭐  தலைமை: அ.சீத்தாபதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) ⭐ முன்னிலை: ஆ.இராமர் (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்), சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்), ந.ஆறுமுகம் (அக்ரி) நகரத் தலைவர்), பெ.நடராஜன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.ஆதிசிவம் (நகர அமைப்பாளர்), மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்), க.ராஜா கென்னடி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐  தொடக்கவுரை: சி.கருணாகரன் (மாவட்ட கவுரவத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரம்பலூர்) ⭐  தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் அறியாமை அகற்றுவோம் ⭐  கருத்துரை: வ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) ⭐  நன்றியுரை: மு.கந்தசாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.


No comments:

Post a Comment