அரியானா கலவரம்: பசுப்பாதுகாவல் படை என்ற அமைப்பின் தலைவன் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

அரியானா கலவரம்: பசுப்பாதுகாவல் படை என்ற அமைப்பின் தலைவன் கைது

குருகிராம், ஆக. 17-அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத் தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி விசுவ இந்து பரிசத் நடத்திய பேரணியில் கல வரம் வெடித்தது. இதில் 6 பேர் பலியானார்கள்.

பசு பாதுகாவலன் பிட்டு பஜ்ரங்கி பேசிய காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் இன்னொரு தரப்பினர் ஊர்வலத்தை மறித்தனர். அப்போது ஊர்வலத்தில் துப்பாக்கிகளுடன் வந்த பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது கூட்டாளிகளி டம் இருந்து ஏஎஸ்பி உஷா குண்டு ஆயுதங் களை பறித்து காவல்துறை வாகனத்தில் வைத்தார். ஆனால் அவர்கள் காவல் துறையினரை மிரட்டி ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நூஹ் பகுதியில் நடந்த கலவரத்தில் தாக் குதல் நடத்தியதாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருந்தனர். இதையடுத்து பிட்டு பஜ்ரங்கி என்கிற ராஜ்குமாரை  கைது செய்தனர். பரிதாபாத்திற்கு அவரை கொண்டு சென்று குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். 

பிட்டு பஜ்ரங்கி மற் றும் அவரது கூட்டாளி கள் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 148 (கலவ ரம்), 149 (சட்டவிரோத கூட்டம்), 332 (காயத்தை ஏற்படுத்துதல்), 353, 186 (பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத் தல்), 395 (ஆயுதத்துடன் மிரட்டுதல்) 397 (கொள்ளை), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), ஆயு தச் சட்ட விதிகளின் கீழ் காவல்துறை  வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு சமூகத்தி னரை மிரட்டும் நோக்கில் காட்சிப்பதிவு வெளியிட்ட பிட்டு பஜ்ரங்கி கூட்டாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment