பொள்ளாச்சியில் 55 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

பொள்ளாச்சியில் 55 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

15.08.2023 செவ்வாய் கிழமை பொள்ளாச்சி கழக மாவட்டம், பொள்ளாச்சி, வெங்கடேசா காலனி, அய்.டி.எம். அரங்கில் 55 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று திரா விடர் கழக மாவட்ட செயலாளர் அ.இரவிச்சந் திரன்  உரையாற்றினார். 

மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து தலைமை யேற்று உரையாற்றினார் கழக காப்பாளர் பொறி யாளர் தி.பரமசிவம் தொடக்கவுரையாற்றினார். அய்டிஎம் பயிற்சி மய்ய இயக்குநர் மிஞிவி சரவணன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங் கிணைத்து நடத்தினார்.மாநில பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி தந்தை பெரியார் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார் தொடர்ந்து மாலை 6 மணி வரை பல தலைப்புகளில்  வகுப்புகள் நடைபெற்றன.

No comments:

Post a Comment