இந்தியாவில் 22 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

இந்தியாவில் 22 பேருக்கு கரோனா

புதுடில்லி, ஆக 16 - இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வரு கிறது. 

அந்த வகையில் நேற்று (15.8.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதி தாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், நாட்டில் இதுவரை கரோனா தொற் றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது.  

இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 961 பேர் கரோனா தொற் றில் இருந்து மீண்டுள்ள னர். நேற்று காலை நில வரப்படி, 1,452 பேர் கரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தனர். அதே போல் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 922 ஆக இருந்தது.

No comments:

Post a Comment