140ஆவது பிறந்த நாள்: திரு.வி.க. சிலைக்கு மாலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

140ஆவது பிறந்த நாள்: திரு.வி.க. சிலைக்கு மாலை

தந்தை பெரியாரின் உற்றத் தோழராகத் திகழ்ந்த "தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வின் 140ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (26.8.2023) காலை 8.30 மணிக்கு பட்டாளம் டாக்டர் கலைஞர் கருணாநிதி பூங்காவில் உள்ள திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவித்தார். வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் சி.பாசுகர், மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன், செம்பியம் கழகத் தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், வில்லிவாக்கம் சி.அன்புச் செல்வன், திரு.வி.க. மாணாக்கர் இயக்கப் பயிற்சியாளர் வி.பாஸ்கரன், பட்டாளம் பி.சாதிக்பாட்சா, மாமன்ற மேனாள் உறுப்பினர் ந.பாலகிருஷ்ணன் மற்றும் கழகத் தோழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment