15.07.2023 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கழக துணைப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா வினைச் சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். மேலும் மாணவர்கள் விழாவில் காமராசர் பற்றிய உரை, பாடல், நாடகம் போன்றவற்றை நிகழ்த்தினார்கள். சிறப்பு விருந்தினர் துரைசந்திரசேகரன் மாணவர்களை பாராட்டி கர்ம வீரர் காமராஜர் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்து எடுத்துரைத்தார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
Monday, July 17, 2023
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment