ரயில்வே தனியார் மயமா? நாடாளுமன்றம் முன்பு போராட்டம் - எஸ்.ஆர்.எம்.யூ. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

ரயில்வே தனியார் மயமா? நாடாளுமன்றம் முன்பு போராட்டம் - எஸ்.ஆர்.எம்.யூ. அறிவிப்பு

சென்னை, ஜூலை 20 ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் எஸ்.ஆர்.எம்.யூ. (தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில் இளைஞர் மாநாடு பெரம்பூர் பனந் தோப்பு ரயில்வே காலனி திடலில் நேற்று (19.7.2023)  நடந்தது. 

மாநாட்டிற்கு பணிமனை கோட்டச் செயலாளர் அறிவழகி தலைமை தாங் கினார். கோட்ட பொறுப்பாளர்கள் பரத் குமார், சஞ்ஜீவி ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநாட்டில் எஸ்.ஆர். எம்.யூ. பொதுச்செயலாளரும், அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம் மேளனத்தின் தலைவருமாகிய கண்ணையா சிறப்புரையாற்றினார். மாநாட்டில், எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் ராஜா சிறீதர், துணை பொதுச் செய லாளர் ஈஸ்வர்லால், சென்னை கோட் டச் செயலாளர் பால்மாக்ஸ் வெல் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கண்ணையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

1924ஆ-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த சமயத்தில் ரயில்வே பணியாளர்களின் பிரச்சினை மற்றும் மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்ற முடிவு செய்து மாநாட்டை நடத்தியுள்ளோம். இதேபோல, ரயில்வே துறை அனைத்து ரெயில்களையும் குளிர்சாதன வசதி யுள்ள பெட்டியாக மாற்றிவிட்டால் ஏழை, எளிய மக்கள் ரயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து, ரயில்வே அமைச்சகத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கூறியது. 

ஆனால், தாராளமயமாக்கல் என்ற கொள்கையின்படி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. 

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரியும், ரயில்வேயை தனியார்மயமாக் கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 10-ஆம் தேதி டில்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த முடிவு செய் துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment