திருப்பதி ஏழுமலையான் பெயரில் சோதனை நகைகளை திருடியவர்கள் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

திருப்பதி ஏழுமலையான் பெயரில் சோதனை நகைகளை திருடியவர்கள் கைது

திருப்பதி, ஜூலை 17 ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழிபாட்டுக்கு நாடு முழுவதில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்து, கார், வேன், ரயில் மூலம் வருகின்றனர். இதனால் திருப்பதி ரயில் நிலையத்தில்   பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.   இந்த நிலையில் திருப்பதி கோவிலில் கடவுள் சேவையாளர்கள் என்ற பெயரில்சிலர் திருப்பதி ஏழுமலையானின் நகைகள் திருடு போயின என்றும், உங்களிடம் அந்த நகைகள் உள்ளதா, யாரும் கடவுள் நகை என்ற பெயரில் கொடுத்ததை நீங்கள் வாங்கினீர்களா என்று கூறி அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அவர்கள் சென்ற பிறகு தங்கள் நகை,  பணம், அலைபேசி ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.  

இதனை அடுத்து அவர்கள் திருப்பதி ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை யடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் திருப்பதி ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மீனா (வயது 23), ராணி (29),அஞ்சலி (25) என தெரிய வந்தது.மேலும் காவலர்கள் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் பணம் விலை உயர்ந்த 3 அலைபேசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து  காவலர்கள் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் இருந்த பணம், அலைபேசிகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கும் தேவஸ் தான ஊழியர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர். 

 இவர்கள் முதல்முறையாக கோவிலுக்கு வரும் நபர்களிடம் தேவஸ்தான ஊழியர்கள் என்ற பெயரில் அடையாள அட்டையைக் காட்டி ஏமாற்றி வந்துள்ளனர்.


No comments:

Post a Comment