சென்னையில் 54 மின்சார ரயில்கள் ரத்து - மக்கள் கொந்தளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

சென்னையில் 54 மின்சார ரயில்கள் ரத்து - மக்கள் கொந்தளிப்பு


சென்னை, ஜூலை 17- சென்னை புறநகர் மின்சார ரயில்களின் புதிய கால அட்டவணையில், 54 ரயில் கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சி யையும், அதிருப்தியையும் ஏற்ப டுத்தி உள்ளது. 

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப் பூண்டி, சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருமால்பூர் மற்றும் வேளச் சேரி ஆகிய இடங்களுக்குப் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன. 

இந்த மின்சார ரயில்களின் கால அட்டவணை ஆண்டு தோறும் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாற்றப்பட்ட கால அட்ட வணை 15.7.2023 முதல் அமலுக்கு வந் துள்ளது.

ஆண்டுதோறும் கால அட்டவ ணையை மாற்றும் போது, பயணி களின் வசதிக்காக ரயில் சேவை களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படும். ஆனால் இந்த ஆண்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள் ளது. அதாவது, சென்னை சென்ட் ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 16 ரயில்களும், கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் வேளச்சேரி வழித்தடத்தில் தலா 19 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட் டுள்ளன.

இது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: பேருந்துக் கட்டணம் உயர்த்தப் பட்ட பிறகு பொதுமக்கள் பெரும் பாலும் தற்போது ரயில் பயணத் தையே அதிகம் மேற்கொள்கின் றனர். இதனால், நாளுக்கு நாள் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது.

பொதுவாக, பயணிகளின் எண் ணிக்கை அதிகரிக்கும்போது ரயில் சேவைகளும் அதிகரிக்கப்படும். ஆனால், தற்போது ரயில் சேவை களின் எண்ணிக்கை குறைக்கப்பட் டுள்ளது.

குறிப்பாக, சென்னை சென்ட்ர லில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு 10.40 மணிக்கு கடைசி ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதே சமயம், சென்னை கடற்கரையி லிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணத்துக்கு கடைசி ரயில் சேவை இயக்கப்பட்டது. 

சென்ட்ரலில் அரக்கோணத் துக்கு கடைசி ரயிலை தவறவிடும் பயணிகள் கடற்கரை ரயில் நிலை யத்துக்குச் சென்று இந்த ரயிலில் ஏறிச் செல்வார்கள்.

மேலும், சென்னை துறைமுகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை மற் றும் சிறீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளில் 2-ஆவது பணிக்காலம் முடிந்து செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருந்து வந்தது.

இந்நிலையில், புதிய கால அட்டவ ணையில் கடற்கரையிலிருந்து நள் ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணத் துக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நள்ளிர வில் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ரயில் நிலைய நடை மேடையிலேயே காத்திருந்து அதி காலையில் இயக்கப்படும் முதல் ரயில் சேவையைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர்.

எனவே, ரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் வசதியைக் கருத் தில் கொண்டு ரத்து செய்யப்பட்ட ரயில் சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரயில் பயணிகள் கூறினர். 

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி களிடம் கேட்டபோது, ``பராமரிப்பு பணிக்காக ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட்ட நெரிசல் இல்லாத மற்றும் இரவு நேரத்தில் மட்டும்தான் ரயில் சேவை ரத்து செய்யப்பட் டுள்ளது.

அதே சமயம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் குறைவான ரயில் களே இயக்கப்படுவதால் அங்கு ரயில் சேவை குறைக்கப்பட வில்லை'' என்றனர்.

No comments:

Post a Comment