பா.ஜ.க.வின் வெற்று முழக்கங்களுக்கு தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் மல்லிகார்ஜுன கார்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

பா.ஜ.க.வின் வெற்று முழக்கங்களுக்கு தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் மல்லிகார்ஜுன கார்கே

புதுதில்லி, ஜூலை 7 - பாஜக-வின் வெற்று முழக்கங்களுக்கு 2024 தேர்தலில் மக்கள் பதி லளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள் ளார்.  

இதுகுறித்து அவர், தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது,

“மோடி அரசின் கொள் ளையால் பணவீக்கம், வேலையில்லாத் திண் டாட்டம் இரண்டும் தொடர்ந்து அதிக ரித்து வருகின்றன. ஆனால், பாஜக அதிகார வெறியில் மூழ்கியிருக்கிறது.  

காய்கறிகளின் விலை விண் ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரு கிறது. நாட்டில் வேலையின்மை விகி தம் 8.45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கிராமங்களில் வேலையின்மை விகிதம் 8.73 சதவிகிதமாக உள்ளது. 

கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் தேவை அதிகமாக உள்ளது, ஆனால் வேலை இல்லை. கிராமப்புற ஊதிய விகிதம் குறைந்துள்ளது.  

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜி, உங்கள் தோல்விகளை விளம்பரங் களின் மூலம் மறைத்துவிட வேண்டும் என்பதற்காகவே நீங்கள் தேர்தலுக்கு முன்ன தாக ‘அச்சே தின்’ (நல்ல நாள்கள் வந்துகொண்டிருக் கின்றன), ‘அமிரித் கால்’ (நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா) போன்ற முழக்கங்களை முன்வைத்து செயல்படு கிறீர்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.  

ஆனால் இந்த முறை அது நடக்காது, மக்கள் விழிப் புணர்வு அடைந்து, பாஜக -வுக்கு எதிராக வாக்களித்து உங்கள் வெற்று முழக்கங் களுக்கு பதிலளிப்பார்கள். பாஜக-வை ஆட்சி யில் இருந்து அகற்றுவார்கள்.”  

-இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment