பழனி மாவட்டம், சத்திரப்பட்டியில் தெருமுனைக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

பழனி மாவட்டம், சத்திரப்பட்டியில் தெருமுனைக்கூட்டம்

சத்திரப்பட்டி, ஜூலை 7- 3-7-2023 அன்று மாலை 6-00 மணியளவில் பழனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சத்திரப்பட்டியில்  வைக் கம் அறப்போர், கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட இளை ஞரணித் தலைவர் சி.கருப்புச்சாமி தலைமை தாங்கினார். 

ஒட்டன்சத்திரம் நகரத்தலைவர் வழக்குரைஞர், ஆனந்தன் அனை வரையும் வரவேற்றார். பழனி மாவட்டச்செயலாளர் தொடக்கவுரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து கழகப் பேச்சாளர் தஞ்சை, இரா.பெரியார் செல்வம் விழாவின் நோக்கங்களை மிகவும் விளக்கமாகவும், உணர்வுப் பூர்வமாகவும்,  எளிமையாக விளங் கும்படி பேருரையாற்றினார்.

இந்நிகழ்வில் வேடசந்தூர் இராமகிருஷ்ணன், சி.இராதா கிருட்டிணன், ச.திராவிடச் செல்வன், பெ.பழனிச்சாமி (ம.தி.மு.க), தமிழ்வேந்தன்(ம.தி.மு.க), அண்ணா, புரூஸ்பெரியார், ப.பாலன், அ.தமிழ்முத்து (தி.இ.த.பே), ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பழனி ராஜா, ஆயக்குடி க.நாகராசு உள்ளிட்ட பெரும்பான்மையான தோழர்கள் பங்கேற்று உரையாற் றினர்.

இறுதியாக பழனி ஒன்றியத் தலைவர் க.மதணபூபதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment