அரசு துணையுடன் மணிப்பூர் கலவரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

அரசு துணையுடன் மணிப்பூர் கலவரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

மதுரை, ஜூலை 25 - மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது என தொல்.திருமாவள வன் குற்றம் சாட்டினார்.

மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:

மணிப்பூர் மாநிலத்தில், பெண் கள் சித்ரவதை செய்யப்பட்டு, ஊர் வலமாக இழுத்து செல்லப்பட்டிருக் கிறார்கள். இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனை கண்டிப்பதோடு கடந்து சென்று விட முடியாது. எதிர்ப்புகளை பலமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் 2ஆ-வது கட் டமாக இந்த போராட்டம் நடக் கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்போம் என்ற வாக்குறுதி அளித்து தான் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந் தார்கள். ஆனால் தற்போது அர சியல் ஆதாயத்திற்காக மதத்தின் பெயரால் 2 சமூகத்தை பிளவு படுத்தி விட்டார்கள். பா.ஜ.க. அங்கு செல்லாதவரை இரு சமூக மக்களிடையே சமூக நல்லிணக்கம் இருந்தது. தற்போது அதனை சீர் குலைத்து விட்டார்கள்.

மணிப்பூரில் நிகழும் கல வரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழ்நாட்டிலும் இதே போன்ற நிலைமை ஏற்படும். மணிப்பூரில் நடந்த கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது. மோடி யும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்.

அந்த மாநில முதலமைச்சரும் பதவி விலக வேண்டும். அவர் கள்தான் இந்த கலவரத்திற்கு கார ணம். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் கட்சியாக பா.ஜ.க. மாறிவிட்டது. அவர்கள், ஓட்டுக் காக கூட முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அரவணைக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்தினாரா?. பா.ஜ.க.வை விமர்சிப்பது எங்க ளுடைய அரசியல் நோக்கம் கிடை யாது. சமூக உணர்வோடு அம்பலப் படுத்துகிறோம். வி.சி.க. சிறிய கட்சி தான், ஆனால் கொள்கையில் இமாலயம் போல உறுதியான வர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment