ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

வேலூர், ஜூலை 10 ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். 

வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் நேற்று (9.7.2023) கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி வருமாறு: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நீண்ட கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுனரின் மரபுக்கு மாறான செயல்பாடுகள் குறித்தும், அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவது குறித்தும் விவரமாக எழுதியுள்ளார். எனவே, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் ஆளுநர் எதிலும் பங்கேற்க முடியாது போய்விடும். எதிர்க்கட்சிகளை ஒருங் கிணைப்பதால் தமிழ்நாட்டில் ஆட்சி போகாது. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காகவும், மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்பதற் காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் அவரது செல் வாக்குப் பெருகும் என்றார்.

இவ்வாறு மாநில காங்கிரஸ் தலைவர் 

கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார்.


No comments:

Post a Comment