இதுதான் ஆனந்த சுதந்திரமோ - பழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா? ஆந்திராவில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

இதுதான் ஆனந்த சுதந்திரமோ - பழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா? ஆந்திராவில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிப்பு

ஓங்கோல், ஜூலை 21 -  ம.பி.யில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நாட்டில் அதிர் வலைகளை ஏற்படுத்திய நிலையில் அதுபோன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத் தின் சித்தி மாவட்டத்தில் அண்மையில் பழங்குடியின இளைஞரின் முகத்தில் ஒருவர் அலட்சியமாக சிகரெட் புகைத்தபடி சிறுநீர் கழிக்கும் கடைசிப் பதிவு வெளியாகி அதிர்ச்சிக்கு உள் ளாக்கியது. இதையடுத்து குற்றம் இழைத்த நபரை தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடும் சட்டங்களின் கீழ் ம.பி. அரசு கைது செய்தது. மேலும் பாதிக்கப்பட்ட இளை ஞரை ம.பி. முதலமைச்சர் சிவ ராஜ் சிங் சவுகான் அழைத்து அவரது பாதங்களை கழுவி சுத்தம் செய்தார் என்ற செய்தி வந்தது.

இந்நிலையில் ஆந்திர மாநி லத்திலும் அதுபோன்ற அதிர்ச் சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஓங்கோ லில் பழங்குடியினத்தை சேர்ந்த நவீன், ராமாஞ்சநேயுலு என்கிற ஆஞ்சி ஆகிய இருவர்களின்மீதும் ஓங்கோல் மற்றும் அதன் சுற்றுப்புற காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலை யில், இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதில் நவீனை அடித்து உதைக்க ஆஞ்சி முடிவு செய்தார். இதன்படி நவீனை மது குடிக்க வைத்து ஓங்கோல் ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் ஆஞ்சி அழைத்து வந்தார். அங்கு ஆஞ்சியும் அவரது நண்பர்கள் 9 பேரும் சேர்ந்து நவீனை ரத்தம் வரும்படி அடித்து உதைத்தனர். பிறகு நவீன் முகத்தில் 3 பேர் சிறுநீர் கழித்தனர். இதனை அந்த கும்பலில் ஒருவர் அலை பேசியில் படம் பிடித்துள்ளார். இந்த காட்சிப்பதிவு தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தில் தொடர் புடைய கும்பலை காவல்துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும், இல்லையேல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என பழங்குடியினர் சங்கத்தினர் அறிவித் துள்ளனர். ம.பி.யை போல கடுமையான சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment