மதுரை மாநகர் - புறநகர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

மதுரை மாநகர் - புறநகர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்

மதுரை,ஜூலை7- மதுரை மாநகர் - புறநகர் மாவட்ட திராவிடர் கழக மகளி ரணி - திராவிட மகளிர் பாசறை சார்பில் 24.6.2023 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

நிகழ்வில்  மதுரை புற நகர் மாவட்ட மகளிரணி தலைவர்  பாக்கியலட்சுமி அனைவரையும் வரவேற்புரை ஆற்றினார். கலந் துரையாடல் கூட்டத் திற்கு மதுரை மாநகர மக ளிரணி தலைவர் ராக்கு தங்கம் தலைமையேற்றார். 

அன்று காலையில் இருந்து நடைபெற்ற குடும்ப விழா குறித்தும், இயக்க வளர்ச்சிக்கு மக ளிரின் பங்களிப்பு அதி முக்கியம் என்பது குறித்தும், இன்றைய சூழலில் சமூக சிக்கலை களைவதற்கு நமது மக ளிர் எவ்வளவு தீவிரமாக செயல்பட வேண்டும் என்பது குறித்தும்,  அமைப்பாக இணைந்து பணியாற்றுவதின் அவசி யத்தையும் எடுத்து ரைத்து, கழக மகளிரணி - மகளிர் பாசறையின் செயல்பாடுகள் பற்றியும் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை வழங்கி னார். தலைமை கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், மதுரை மாநகர், புறநகர் மாவட் டத் தலைவர்கள், செய லாளர்கள் ஆகியோர் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடை பெற ஒத்துழைப்பு வழங்கி முன்னிலையேற்று சிறப்பித்தனர்.

வருகை தந்த பல மக ளிர்  தோழர்கள்  தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். 

இறுதியாக மதுரை மாநகர் மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் அ.அல்லிராணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment