பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களை முதலமைச்சர் சந்திக்காதது ஏன்? டில்லி மகளிர் ஆணையம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களை முதலமைச்சர் சந்திக்காதது ஏன்? டில்லி மகளிர் ஆணையம் கேள்வி

இம்பால், ஜூலை 26- மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

அப்போது அவரிடம் அந்த பெண்கள், அரசு சார்பில் யாரும் தங்களை சந்திக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய சுவாதி மலிவால், "முதலமைச்சர் பைரன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அவர் ஏன் சந் திக்கவில்லை. நான் டெல்லியில் இருந்து வந்து அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திக்க முடியுமானால், அவ ரால் ஏன் முடியாது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

மணிப்பூரில் பிஜேபியின் இரட்டை எஞ்சின் ஆட்சி தோல்வி கண்டது ஏன்? சிபிஅய் பொதுச் செயலாளர் டி.ராஜா கேள்வி

சென்னை, ஜூலை 26- சென்னை மீனம்பாக்கம் விமான நிலை யத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, கூறியதாவது:- 

மணிப்பூர் கொழுந்து விட்டு எரிகிறது. பல நாட்களாக வன்முறை தொடர்ந்து கொண்டு உள்ளது. நூற்றுக்கணக்கான வர்கள் கொல்லப்பட்டு உள்ள னர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் அகதி யாக மாற்றப்பட்டு உள்ளனர். பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இழக்கப்படுகின்ற வன்முறைகள் பற்றி சொல்ல முடியாத வார்த்தைகள் வகையில் கோபம் ஏற்படுகின்றது. மணிப்பூர் சம்பவம் குறித்து எல்லா கட்சிகளும் பேசியபோது பிரதமர் மோடி அமைதி காத்து வந்தார். ஒரு காட்சிப்பதிவு வெளியான பின்னர்தான் வாய் திறந்து உள்ளார். இந்தியா ஜனநாயகத்தின் தாய் என மோடி சொல்கிறார். பாரத தாயின் மக்கள்தான் மணிப்பூர் பெண்கள். மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் நடக்கிறது. மணிப்பூர் சம்பவத்தில் மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சி தோல்வி கண்டு உள்ளது.

மணிப்பூர் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதில் மோடி, அமித்ஷா பதில் என்ன?. மணிப்பூரில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். மக்க ளுக்கு பாதுகாப்பு வேண்டும். இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரு கின்றன. நாடாளுமன்றத்தில் பிரதமர் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் சம்பவம் எதிரொலிக்கும். மக்களுக்கு நல்லது செய்பவர் கள்தான் ஆட்சியில் அமர வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதான் பி.ஜே.பி.யின் மகாராட்டிர அரசின் லட்சணம் ஆம்புலன்ஸ் இல்லை: சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட இளைஞர் உடல்

புனே, ஜூலை 26- மகாராட்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத் தில் உள்ள குருஷ்னர் கிராமத் தைச் சேர்ந்த 23 வயது வாலிபர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். 

அவர் உடல்நலம் பாதிக் கப்பட்டு ஹேமல்காசா பகுதி யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சமீபத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகர் பகுதியில் இருந்து தொலை வில் உள்ள கிராமத்துக்கு வாலிபரின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் கிடைக்கவில்லை. 

எனவே குடும்பத்தினர் வாலிபரின் உடலை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் மரக்கட்டிலில் வாலிபர் உடலைக் கட்டினர். பின்னர் அவர்கள் அதை மோட்டார் சைக்கிளின் பின் புறம் வைத்து சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். ஆம் புலன்ஸ் கிடைக்காததால் வாலிபரின் உடல் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லப்பட்ட அவல காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

பெண்களுக்கு பாலியல் தொல்லை 

கொடுத்த ராணுவ அதிகாரி

புதுடில்லி, ஜூலை 26- மணிப்பூரில் பெரும்பான்மை இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அங்கு துணை ராணுவப் படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எல்லை பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். 

இதுகுறித்தான காட்சிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சம்பவம் குறித்து அறிந்த எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த மூத்த அதிகாரி சதீஷ் பிரசாத் என்பவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் அவரை இடைநீக்கம் செய்து எல்லை பாதுகாப்பு படை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment