அமைச்சர்களுக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

அமைச்சர்களுக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்

சென்னை, ஜூலை 29-  மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளு நருக்கு அதிகாரம் கிடையாது என்பது செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் 

செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் வாதிட்டார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தில் கைதான செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இவரை இலாகா இல் லாத அமைச்சராக அறிவித்து அரசு அரசாணை பிறப் பித்துள்ளது. இவரை பதவி நீக்கம் செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவு, அடுத்த சில மணி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி எந்தத் தகுதியின் அடிப்படையில் இலாகா இல் லாத அமைச்சராக நீடிக் கிறார்? என்று கோ வாரண்டோ வழக்கை அ.தி.மு.க., மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஜெயவர்தன், கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.

அதேபோல செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவரான வழக்குரைஞர் எம்.எல்.ரவியும் தனியாக வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறிய தாவது:-

அரசமைப்புச் சட்ட ரீதியாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படை யிலும் அமைச்சரவையின் முடிவு களுக் கும், ஆலோசனைகளுக்கும் கட்டுப் பட்டே ஆளுநர் செயல்பட முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு இணையாக நிர்வா கம் நடத்த ஆளுநருக்கு சட்ட அதிகாரம் கிடையாது.

ஆளுநரோ, அல்லது குடியரசுத் தலைவரோ தங்களுக்கான தனிப்பட்ட அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. 

அதேபோல குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சராக பதவியில் நீடிக்க முடி யாது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட வர்கள் அமைச்சராக நீடிக்க அரச மைப்புச் சட்டமோ அல்லது சட்ட விதிகளோ தடையாக இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்வது. சட்டமன்ற உறுப்பினர்களை விட அமைச்சர்கள் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.1.05 லட்சமும், அமைச்சர்களுக்கு ரூ.76 ஆயிரமும் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேபோல மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட முடி யாது என்பதால் இந்த வழக்குகளும் விசாரணைக்கு உகந்தது அல்ல" இவ்வாறு அவர் கூறினார்.

மனுதாரர் ஜெயவர்தன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் வி.ராகவாச்சாரி, வழக்குரைஞர் அய்.எஸ்.இன்பதுரை ஆஜராகி, ''சிறையில் உள்ள ஒருவரால் எப்படி அமைச்சராக செயல்பட முடி யும்? சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள அவரால் அரசு பணியை மேற்கொள்ள முடியாது என்பதால் அவர் அமைச்சர் பதவியில் எவ்வாறு நீடிக்க முடியும் என்ற கேள்வி முதன்முறையாக எழுந் துள்ளது.

தனது கண் முன்பாக நடக்கும் சட்ட விரோதங்களை கண்டும், காணாததும் போல ஆளுநர் இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை தான் விரும்பவில்லை என்று ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதலமைச்சர் அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளார்.

ஆளுநரின் நம்பிக்கையை பெறாத ஒருவர் அமைச்சராக, அமைச்சரவையில் நீடிக்க முடியாது'' என்று வாதிட்டனர்.

மனுதாரர் எம்.எல்.ரவி சார்பில் வழக்குரைஞர் சக்திவேல் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக் கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment