மணிப்பூர் பா.ஜ.க. ஆட்சி விலகவேண்டும்: சி.பி.எம். மாநாட்டில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

மணிப்பூர் பா.ஜ.க. ஆட்சி விலகவேண்டும்: சி.பி.எம். மாநாட்டில் தீர்மானம்

மதுரை, ஜூலை 26 - “நாங்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை; ஆனா, நாங்க ஒன்னாத்தான் இருக்கோம்” என்ற புதுகை பூபா ளம் கலைக்குழுவின் பாடல் வரிக ளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு 23.7.2023 அன்று துவங்கியது. மாநாட் டிற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வரவேற்புரையாற்றினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தள பதி (திமுக), கார்த்திகேயன் (காங் கிரஸ்), மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மகபூப் ஜான் (மதிமுக) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கள் எஸ்.பாலசுப்பிரமணியன், சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற் குழு, மாவட்டக்குழு உறுப் பினர்கள், இடைக்கமிட்டிச் செய லாளர்கள், கிளைச் செயலாளர் கள், கட்சி உறுப்பினர்கள் உட்பட ஆயிரக் கணக் கானோர் பங்கேற்றிருந்தனர்.  

தீர்மானம்

மணிப்பூர் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மாநில பாஜக அரசு பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தீர்மானத்தை எஸ்.கே.பொன்னுத்தாய் முன் மொழிந்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன் வழி மொழிந்தார்.


No comments:

Post a Comment