அசாம் பிஜேபி முதலமைச்சர் கக்கும் விஷம்! அவரவர் மதத்திற்குள் மண உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டுமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

அசாம் பிஜேபி முதலமைச்சர் கக்கும் விஷம்! அவரவர் மதத்திற்குள் மண உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டுமாம்

அசாம், ஜூலை  31 - மதம் கடந்த காதல் திருமணங்களால்தான் சமூகத்தின் அமைதி குலைவதாக அசாம் மாநி லத்தைச் சேர்ந்த பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். அவரவர் அவரவரது மதத்திற் குள் மண உறவுகளை வைத்துக் கொண்டால் பிரச்சனை வராது என்றும் பேசியுள்ளார். 

காதல் திருமணங்களை ‘லவ் ஜிகாத்’ என பாஜக தலைவர்கள் கொச்சைப்படுத் துவதாக காங்கிரஸ் தலைவர் பூபன் போரா பேசியிருந்தார். கணவர் திருதராட்டிரர் பார்வையிழந்தவர் என்பதால், தன் கணவர் பார்க்க முடியாத உலகை தானும் பார்க்க மாட்டேன் என்று காந்தாரி தனது கண்களை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டார். காரணம் காதல். அதேபோல சிறீகிருஷ்ணருடன் கொண்ட காதலால் ருக்மணி வீட்டை விட்டு வெளியேறி வந்தார். கிருஷ்ணர் ருக்மணி யுடன் தப்பிச் செல்ல வந்தபோது, அர்ஜுனன் கிருஷ்ணனுடன் வர ஒரு பெண்ணாக மாறுவேடமிட்டார். இவையெல்லாம் காதலால் நிகழ்ந்தவை. இவ்வாறு பெண்ணோ ஆணோ மனமொத்து செய்யும் காதல் திருமணங்க ளை ‘லவ் ஜிகாத்’ என கொச்சைப்படுத்தக் கூடாது என்று போரா கூறியிருந்தார்.

இதற்குத்தான் ஹிமந்தா பிஸ்வா  ஆத்திரப்பட்டுள்ளார். எதற்காக மகாபாரத கதையை யெல்லாம் போரா இழுக்கிறார் என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.

 “இந்து ஆண்கள் இந்துப் பெண்களை மணக்க வேண்டும், முஸ்லிம் ஆண்கள் முஸ்லிம் பெண்களை மணக்க வேண்டும். இதுதான் சமூகத் தில் அமைதியை நிலைநாட்ட உதவும். இரு மதத்தின ரிடையே காதல் திருமணம் நடந்தால், இது இந்திய அரசமைப்பின்படி சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட வேண்டும். 

மேலும், “ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கட்டாயப்படுத்தி மதம் மாறும் நிகழ்வையே ‘லவ்ஜிகாத்’ என்று கூறுவதாகவும், கிருஷ்ணர் ருக்மணியின் மதத்தை மாற்றவில்லை” என்று கூறியிருக்கும் சர்மா, “காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்து மதத்தை எதிர்த்து வந்தால் மதரஸா-மசூதி யில்தான், அந்தக் கட்சியின் கடைசி முகவரியைக் கண்டுபிடிக்க வேண்டியது இருக்கும்” என்றும் கொதித்துள்ளார்.


No comments:

Post a Comment