ஒடிசா ரயில் விபத்து : தொலைத் தொடர்புப் பிரிவின் அலட்சியமே காரணம் விசாரணை அறிக்கையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

ஒடிசா ரயில் விபத்து : தொலைத் தொடர்புப் பிரிவின் அலட்சியமே காரணம் விசாரணை அறிக்கையில் தகவல்

புதுடில்லி, ஜூலை 7 கடந்த ஜூன் 2-ஆம் தேதி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாக பஜார் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக் குள்ளானது. 

இதில் கோரமண்டல் ரயிலின் சில பெட்டிகள் அவ்வழியாக சென்ற பெங்களூரு-ஹவுரா ரயில் மீதும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர ரெயில் விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணை நடத்தினார். 

இந்நிலையில் இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 40 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை கடந்த ஜூன் 29-ஆம் தேதி ரயில்வே வாரியத்திடம் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் அலட்சியமே விபத்திற்கான பிரதான காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திருமாவளவனுக்கு காங்கிரஸ் தலைவர்  அழைப்பு  

புதுடில்லி, ஜூலை 7 அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 23-ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. 2-ஆவது கூட்டம் கருநாடகா தலைநகர் பெங்களூருவில் வருகிற 17, 18ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பின ருமான திருமாவளவனுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு திருமாவளவன் கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல்கள் வெளி யாகியுள்ளன.

இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தில்,

"தொல். திருமாவளவன் அவர்களே 17 ஜூலை 2023 அன்று மாலை 6.00 மணிக்கு கருநாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் 18 ஜூலை 2023 அன்று காலை 11.00 மணி முதல் தொடரும். உங்களை பெங்களூரில் சந்திக்க ஆவ லுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment