இந்தியாவில் நடந்த திருமணத்துக்கு வெளிநாட்டில் மணவிலக்கு கோர முடியாது சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

இந்தியாவில் நடந்த திருமணத்துக்கு வெளிநாட்டில் மணவிலக்கு கோர முடியாது சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 21 - தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ணும், கருநாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் ஆஸ்திரேலியாவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த போது பழக்கம் ஏற்பட்டு 2006ஆம் ஆண்டு சென்னை யில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கருநாடகத்தைச் சேர்ந்த நபர், ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் மணவிலக்கு  கோரி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மணவிலக்கு  வழங்கி 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆஸ்திரேலிய நீதிமன்றத் தீர்ப்பு ரத்து

இந்த நிலையில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கிய மணவிலக்கு  செல்லாது என உத்தரவிடக்கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 'திருமணம் இந்தியா வில் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் மணவிலக்கு  வழங்க முடியாது. எனவே ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்பநல நீதிமன்றம், 'இந்தியாவில் நடந்த திருமணத்துக்கு வெளி நாட்டில் மணவிலக்கு  கோர முடியாது. இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர்ந்து நிவார ணம் பெற முடியும். ஆஸ்திரேலிய நீதிமன்றம் மனுதார ருக்கு எந்த சம்மனும் அனுப்பாமல் முடிவெடுத்துள்ளது. எனவே, ஆஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கிய மணவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த உத்தரவு செல்லாது' என தீர்ப்பு கூறியது.

No comments:

Post a Comment