தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ரவீந்திரநாத் வெற்றி செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ரவீந்திரநாத் வெற்றி செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜூலை 7 தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின்   வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று (6.7.2023) தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment