புலவர் முத்து.வாவாசி எழுதிய "கலைஞர் செதுக்கிய தமிழகம்- திமுக ஆட்சிக்காலச் சாதனைகள்" (4 பாகங்கள்) வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

புலவர் முத்து.வாவாசி எழுதிய "கலைஞர் செதுக்கிய தமிழகம்- திமுக ஆட்சிக்காலச் சாதனைகள்" (4 பாகங்கள்) வெளியீட்டு விழா

பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் புலவர் முத்து.வாவாசி எழுதிய'கலைஞர் செதுக்கிய தமிழகம்- திமுக ஆட்சிக்காலச் சாதனைகள்' (4 பாகங்கள்) தமிழர் தலைவர் வெளியிட்டார்

சென்னை,ஜூலை7- பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் நேற்று (6.7.2023) புலவர் முத்து.வாவாசி எழுதிய "கலைஞர் செதுக்கிய தமிழகம்- திமுக ஆட்சிக்காலச் சாதனைகள்" (4 பாகங்கள்) வெளியீட்டு விழா திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அனைவரையும் வரவேற்றார்.

குத்தாலம் சட்டமன்ற தொகுதி மேனாள் உறுப்பினர் கல்யாணம் வாழ்த்துரை ஆற்றினார்.

நூலாசிரியர் பணியைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முத்து. வாவாசி-புஷ்பம் இணையருக்கு பட்டா டையை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு முத்து.வாவாசி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

தலைமையுரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களுக்கு குத்தாலம் கல்யாணம் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

முத்து.வாவாசி அவர்களுக்கு குத்தாலம் கல்யாணம், திருவொற்றியூர் மாவட்ட கழகத் துணைத் தலைவர் திருவொற்றியூர் ந.இராசேந்திரன், இராமசாமி, கடம்பத்தூர் ஆசிரியர்கள் உள்பட பலரும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகத் தொகுப்பை வெளியிட்டு பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் கழக மகளிரணி சி.வெற்றி செல்வி பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

நூலாசிரியர் முத்து.வாவாசி ஏற்புரை ஆற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

முத்து.வாவாசி எழுதிய "கலைஞர் செதுக்கிய தமிழகம்- திமுக ஆட்சிக்காலச் சாதனைகள்" (4 பாகங்கள்) விலை மதிப்பு ரூபாய் மூவாயிரம். விழாவில் சலுகையுடன் ரூ.1800க்கு வழங்கப்பட்டது. ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் புத்தங்களைப் பெற்றுக்கொண்டனர்.

சிகாகோ அரசர் அருளாளர், விழிகள் வேணுகோபால், கழகப்பொருளாளர் வீ.கும ரேசன், தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் சுவாமிநாதன் தேவதாஸ், பேராசிரியர் நம்.சீனிவாசன், மதுரை மருதவிநாயகம், கழக துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் ஊமை.ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், அயனாவரம் துரை ராஜ், தே.ஒளிவண்ணன், ஆ.துரை, இரா. வில்வநாதன், செ.ர. பார்த்தசாரதி, அரும் பாக்கம் சா. தாமோதரன், ராவணன், செம் பியம் கி.இராமலிங்கம், உடுமலை வடிவேல், பெரியார்மாணாக்கன், பூவை செல்வி, தென்.மாறன்,ஜனார்த்தனன் உள்ளிட்டபெரியார் நூலக வாசகர் வட்டப்பொறுப்பாளர்கள்  உள்பட பலரும் விழாவில் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment