இதுதான் ஏழுமலையான் சக்தியோ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

இதுதான் ஏழுமலையான் சக்தியோ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் கவிழ்ந்தது!

திருப்பதி, ஜூலை 7  திருப்பதி ஏழு மலையான் கோவில் உண்டியல் கீழே விழுந்து, உடைந்து அதிலிருந்த சில் லறைகள் தரையில் சிதறின. 

திருப்பதி ஏழுமலையானுக்குப் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம், நகைகள் ஆகியவை நாள் தோறும் கோவிலுக்கு வெளியே உள்ள பரக்காமணி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டுக் கணக்கிடப்படும்.  வழக்கம்போல் நேற்று (6.7.2023) நிரம் பிய உண்டியல்களை ஊழியர்கள் பரக்காமணி மண்டபத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  காணிக்கைகளால் நிரம்பியிருந்த மூடி முத்திரையிட்ட உண்டியல் ஒன்றை ஊழியர்கள் தள்ளுவண்டியில் வைத்து இழுக்க முயன்றபோது கோவில் முன் வாசல் அருகே தவறி கீழே விழுந்தது.  உண்டியல் 'சீல்' உடைந்து  சில்லறை நாணயங்கள் தரையில் சிதறின.  இத னைக் கவனித்த ஊழியர்கள் அவற்றைப் பொறுக்கி எடுத்து உண்டியலில் போட்டு கிரேன்மூலம் அந்த உண்டி யலை லாரியில் ஏற்றி பரக்காணி மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். ஒப்பந்த ஊழியர்கள் அலட்சியமாகக் கையாண்ட விதமே உண்டியல் சரிந்து உடைந்ததற்கு காரணம் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.








No comments:

Post a Comment