புதுகை தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

புதுகை தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கு

ஆலங்குடி, ஜூலை 10 - புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே இனாம்கிராமத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (49). கார் வாங்கி விற்பனை செய்து வரும் இவர், திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணசுந்தரிடம் கொடுத்த புகார் மனுவில், புதுக்கோட்டை சார்லஸ் நகரில் வசிக்கும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. பொருளாளர் முருகானந்தம், தொழில் செய்வதற் காக கடந்த 2017இல், 2 தவணையாக ரூ.60லட்சம் கடன் வாங்கினார். பலமுறை கேட்டும் கடன் தொகையை திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டார். 

2022 டிசம்பர் 7ஆம் தேதி எனது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட முருகானந்தம் என்னையும், என் குடும்பத்தினரையும் மத ரீதியாக இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து கீரமங்கலம் காவல்துறையினர் மோசடி, மதரீதியாக இழிவுபடுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் முருகானந்தம் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment