ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து

பென்னாகரம், ஜூலை 29- ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித் துள்ளது.

கருநாடகாவில் உள்ள காவிரிநீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள் ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கருநாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைக ளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இத னால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினா டிக்கு 22 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கெனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு -கருநாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்த டைந்தது. 27.7.2023 அன்று மாலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி யாக இருந்த நீர்வரத்து நேற்று (28.7.2023) காலை 10 மணி நில வரப்படி 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அருவி யில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண் டுலுவில் ஒன்றிய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிர மாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் 3-ஆவது நாளாக தடை விதித்து உள்ளது.

இதற்கிடையே கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண் ணீர் மேட்டூர் அணையை வந்த டைந்தது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 10,232 கனஅடி வீதமாக இருந்த நீர்வரத்தானது நேற்று (28.7.2023) மாலை வினா டிக்கு 15 ஆயிரத்து 232 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினா டிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. 27.7.2023 அன்று மாலை 64.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 65.01 அடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தற்போது கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது.

இதன் காரணமாக நேற்று அந்த அணை களில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9,071 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment