ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் நிறைவேற்றம்

சென்னை ஜூலை 25  ராஜஸ்தானில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச வரு மான உறுதி திட்ட மசோதா 2023 அம்மாநில சட்டப் பேரவையில் கடந்த வியா ழக்கிழமை நிறைவேற்றப்பட் டுள்ளது. 

இதன்மூலம் நாட்டிலேயே இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக ராஜஸ் தான் திகழ்கிறது. இச்சட்டத் தின் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 125 நாட்களுக்கு உத்தரவாத மாக வேலை வாய்ப்பு கிடைக் கும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் முதியோர், மாற்றுத் திறனா ளிகள், விதவைகள், தனியாக வசிக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும். இத்தொகை ஆண்டுதோறும் 15 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் மாநில அரசு வழங்கும் அனைத்து ஓய்வூதியத் திட்டங்களுடன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வேலை உறுதித் திட்டங்களை உள்ளடக்கிய சட்டத்தை உரு வாக்கி, ஏழை மக்கள் மற்றும் குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு உரிமையை வழங்கும் நோக்கில் வரும் ஆண்டில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச உத்தரவாத வரு மானத் திட்டத்தைச் செயல் படுத்துவதாக அறிவித்தார்.

கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி 100 வேலை நாட்களை நிறைவு செய்யும் குடும்பத்துக்கு முதல மைச்சர் கிராம வேலை உறுதி திட்டத்தின் கீழ் 25 நாள் கூடுதல் வேலை வழங்கப்படும். நகரங்களில் ஒரு குடும்பத் துக்கு இந்திரா காந்தி நகர்ப் புற வேலை உறுதி திட்டத் தின்கீழ் 125 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். 

இவ்வாறு ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment