ஆறு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

ஆறு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை, ஜூலை 8 -  நடப்புக் கல்வி ஆண்டில் 6 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடை பெற உள்ள காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வு களுக்கான உத்தேச காலஅட்ட வணை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதி காரி அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற் றறிக்கை விவரம்:

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள் ளிகளில் 6 முதல் 12ஆ-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-_2024) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.  மாண வர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 6 முதல் 12ஆ-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் செப்.15 முதல் 27ஆம்  தேதி வரையும், அரை யாண்டு தேர்வுகள் டிச.11 முதல் 22ஆ-ம் தேதி வரையும் நடை பெறும். 6 முதல் 9ஆ-ம் வகுப்பு களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3ஆ-வது வாரத்தில் நடத்தப்படும். 

இதுதவிர 10, 11, 12ஆ-ம் வகுப்புக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுகள், 6 முதல் 9ஆ-ம் வகுப்புகளுக்கான பரு வத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இவற்றை பின்பற்றி மாண வர்களை தேர்வுகளுக்கு தயார் படுத்த அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல் வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக் கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment