டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை - பொது சுகாதாரத்துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை - பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை,ஜூன்20 - சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஆங் காங்கே மழைநீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவலாக கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்கவும், போதிய அளவு மருந்துகளைகையிருப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment