செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

செய்திச் சுருக்கம்

வகுப்புகளை

அரசு ஆரம்பப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளை யும் சேர்த்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தக் கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தல்.

சேர்ப்பு

சென்னை சென்ட்ரல் - மங்களூரு விரைவு ரயில் உட்பட 8 விரைவு ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக, குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல்.

விண்ணப்பம்

2023-2024ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் ஷ்ஷ்ஷ்.tஸீலீமீணீறீtலீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ/ஷ்ஷ்ஷ்.tஸீனீமீபீவீநீணீறீsமீறீமீநீtவீஷீஸீ.ஷீக்ஷீரீ என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்திற்கான பதிவு இன்று முதல் தொடங்கி வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கடைமடைக்கு...

இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் 6 நாள்களிலேயே கடைமடைப் பகுதி முதன்மை வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்துள்ளது. இதற்கு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கி தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்தியதே காரணமாகும்.

அபராதம்

சென்னையில் கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நிலுவையில் இருந்துவரும் 1,99,983 வழக்குகள் போக்குவரத்து காவலர்கள் முடித்து வைத்து, அபராதமாக ரூ.8.42 கோடி வசூலித்துள்ளனர்.

கருத்து கேட்க...

சென்னைக்கான புதிய ஒருங்கிணைந்த போக்கு வரத்துத் திட்டம் தொடர்பாக, வீடு வீடாக சென்று, 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்.

ஏற்றுமதி

சிறுதானியங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் வெளிநாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்தது ஆகியவற்றுக்காக பன்னாட்டு வேளாண் மேம்பாட்டு நிதிய தலைவர் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment