கொடூர நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

கொடூர நிகழ்வு

உயிருள்ளவரின் உடல் உறுப்புகள் விற்பனை 

 தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை

கொச்சி, ஜூன் 15 விபத்தில் சிக்கிய வரை காப்பாற்ற முயற்சிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி, அவரது கல்லீரலை விதியை மீறி அகற்றி வெளிநாட்டினர் ஒருவ ருக்கு பொருத்தி கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்ற கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக கேரள தனியார் மருத்துவமனை மீதும், மருத்துவர்கள் மீதும் நீதி மன்றம் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

கேரளாவில் தனியார் மருத்துவ மனை  ஒன்று கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு உயிருள்ளவரின் உடலுறுப்பை எடுத்து வெளிநாட்டினர் ஒருவ ருக்கு பொருத்திய கோடூர நிகழ்வை மருத்துவர் ஒருவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, குற்றம் செய்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க காரணமாகி இருக்கிறார்.

கேரளாவில் 2009ஆ-ம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி, அபின் என்பவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ஒரு மின்கம்பத்தில் மோதி விபத்து நேரிட்டது. இதில் அவரது தலை யில் படுகாயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் தனியார் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட் டுள்ளார்.

டிசம்பர் 1-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாகவும், அவரது முக்கிய உறுப்புகள் அகற் றப்பட்டதாகவும், அவரது கல் லீரல் வெளிநாட்டு நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டதாக வும், நாளிதழ்களில் செய்தி வெளி யானது. அதில் சட்டத்தை மீறி, தவறாக சித்தரித்து, பாதிக்கப்பட் டவரின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற்று உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாக விசார ணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியைப் பார்த்து கொல்லத்தைச் சேர்ந்த மருத்துவ ரான கணபதி என்பவர் அங்குள்ள குற்றவியல் முதல் வகுப்பு உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், விபத்தைச் சந்தித்த வருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாகக்கூறி விதிகளை மீறி அவரது உறுப்புகள் பெறப்பட்டு, கல்லீரல் வெளிநாட் டினர் ஒருவருக்கு பொருத்தப்பட்டி ருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இருந்தார்.

வழக்கை நீதிபதி எல்டோஸ் மேத்யூ விசாரணைக்கு ஏற்றார்.

முதல் கட்ட விசாரணையில் வழக்குதாரரின் புகாரில் அடிப் படை ஆதாரம் இருப்பதாகக் கண்டறிந்து, இதில் விதிமுறை மீறிய தனியார் மருத்துவமனை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிபதி முடிவு செய்துள்ளார். குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக அழைப் பாணை அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறி உள்ளதாவது:- இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மனித உறுப்புகள் மாற்றச்சட்டம், 1994இ-ன்கீழ், சட்டப்படி நட வடிக்கை எடுப்பதற்கு அடிப்படை ஆதாரமும், போதுமான முகாந் திரங்களும் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக அழைப் பாணை அனுப்ப வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் இருந்த தனியார் மருத்துவமனை, விபத்துக் குப் பிறகு அவர் அழைத்துச் செல்லப்பட்ட 2 மருத்துவமனை களின் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மீதான குற்றச்சாட்டின் மீது விசா ரணை நடத்தப்படும். விபத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் மண்டை ஓட்டில் இருந்து ரத்தத்தை வெளி யேற்றினால் அவரது உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும்,

ஆனால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்ற 2 மருத்துவமனை களிலும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் பரிசோ திக்கப்பட்டாலும், அவரது உடலு றுப்பை எடுக்கவே முயற்சிகளை மேற்கொண்டனர் பாதிக்கப்பட்ட நபருக்கு நரம்பியல் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு அல்லது ரத்தத்தை வெளியேற்றுவதற்கு திட்டமிடுவதற்கு முன்பே,  உறுப்பு பொருத்துவதற்கான ரத்தப்பரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மூளைச்சாவு நடந்துள்ளதாக அறிவிப்பதற்கு முன்பாகவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் விபத்தில் சிக்கிய நபரைப் பார்த்துள்ளனர். அவரது கல்லீரல் செயல்படுகிறதா என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மூளைச்சாவு நடந்துள்ளதாக அறிவிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு கட் டாயமாக நடத்த வேண்டிய மூச் சுத்திணறல் சோதனை நடத்தப் படவில்லை. விபத்தைச் சந்தித்த நபர் மூளைச்சாவு அடைந்ததாக வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ், விதிமுறைப்படி இல்லை. இந்த இறப்பு சான்றிதழில் கையெழுத்து போட்டுள்ள மருத்துவர்கள் சட் டப்படி கையெழுத்து போடுவதற்கு அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. விபத்தில் பாதிக்கப்பட்டவரின் கல்லீரல் உள் அங்கீகாரக் குழுவின் அனுமதியைப் பெறாமல், வெளி நாட்டினர் ஒருவருக்குப் பொருத் தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் மருத் துவமனை மற்றும் நடந்துள்ள குற்றத்தில் தொடர்புடைய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடலுறுப்பு கொடை  பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால் பணத்திற்காக இவ்வாறு மூளைச்சாவு அடைந்தார் என்று கூறி உயிரோடு உள்ள நபர்களின் உடலுறுப்புகளை திருடி பணம் பார்க்கும் தனியார் மருத்துவ மனைகளின் கொடூரம் முதல் முதலாக வெளிவந்துள்ளது குறிப் பிடத்தக்கதாகும்


No comments:

Post a Comment