கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

கழகக் களத்தில்...!

2.6.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ✸தலைமை: தமிழ் ஓவியா மாரி முத்து (மாநில துணைச் செயலாளர்) ✸ வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) ✸ முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளி வண்ணன் (மாநிலச்செயலாளர்) ✸ நூல் : முத்தமிழ் அறிஞர் அவர்களின் நெஞ்சுக்கு நீதி பாகம் 1 ✸ நூல் ஆய்வுரை:  மருத்துவர் சோம.இளங்கோவன் (தலைவர், பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) ✸நன்றியுரை : கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்)✸ இணைப்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) ✸ (உரையைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கேள்விகளுக்குப் பதிலும் சிறப்பான கேள்விக்குப் பரிசும் வழங்கப்படும்.) ✸ சூம் அய்டி எண் 82311400757  ✸ கடவுச்சொல்  PERIYAR

3.6.2023 சனிக்கிழமை

பெரியார் கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்கம் தொடக்கவிழா

சென்னை: காலை 10.00 மணி ✸ இடம்: 20, குமரன் நகர், 80 அடி சாலை, பெரவள்ளூர், சென்னை ✸ விழைவு: நலச் சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு வட சென்னை மாவட்டத்தின் அனைத்து அமைப்புகளின் கழகத் தோழர்களும் வருகை தருமாறு வேண்டுகிறோம் ✸ இவண்: க.சுமதி கணேசன் (வடசென்னை மாவட்ட திராவிடர் தொழிலாளரணி செயலாளர்)

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர்: மாலை 5.00 மணி ✸ இடம்: விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத்தூர் (சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், ஆனந்தன் அவர்களது அலுவலகம்) ✸ பொருள்: நமது குடும்பத்தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில 27-05-2023 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைபடுத்துவதற்காக, கழகத் தோழர்களின் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தங்களின் மேலான கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கான சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம்  ஆகையால்,  அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் ✸ தலைமை: ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்) ✸வரவேற்பு: ஆ.விஜய் உத்தமன் ராஜ் (சோழிங்கநல்லூர் மாவட்ட  செயலாளர்) ✸ முன்னிலை: நித்தியானந்தம் (சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர்), கே.தமிழரசன் (மேடவாக்கம் மாவட்ட இளைஞரணி செயலாளர்), வேலூர் பாண்டு (மாவட்ட துணை செயலாளர்) ✸ நன்றியுரை: தமிழினியன் (சோழிங்கநல்லூர் மாவட்ட கழக  துணை தலைவர்)

ஆவடி மாவட்ட திராவிடர் கழக 

மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி:  காலை 10.30 மணி  இடம்: தமிழ்மணி அவர்களின் இல்லம், ஆவடி ✸ வரவேற்புரை:  ஜெயந்தி (மகளிரணி செயலாளர்) ✸ தலைமை: மு.செல்வி (மகளிரணி தலைவர்) ✸பொருள்: 1) மகளிரணி, மகளிர் பாசறைக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்து கட்டமைப்பை மேம்படுத்துதல், 2) பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் ✸சிறப்புரை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர்: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்)  றீ நன்றியுரை: அன்புச்செல்வி (மகளிர் பாசறை தலைவர்) ✸ குறிப்பு: வாய்ப்பு இருக்கும்  வடசென்னை, தென் சென்னை, திருவொற்றியூர், தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் மகளிர் அணி திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள் பங்கேற்கவும்.

4.6.2023 ஞாயிற்றுக்கிழமை

வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 

சென்னை: காலை 10.30 மணி ✸ இடம்: பெரியார் திடல், சென்னை ✸ தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்) ✸தொடக்கவுரை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) ✸ சிறப்புரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) ✸ பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், பிரச்சாரத் திட்டங்கள், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, அமைப்புப் பணிகள்,  விடுதலை சந்தா சேர்த்தல், 27.5.2023இல் நடைபெற்ற, சென்னை - 6 மாவட்ட கலந்து ரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேசிய கருத்து களை செயல்படுத்துதல். ✸ குறிப்பு: அனைத்து அணித் தோழர்களும் கலந்து கொள்ள வேண்டும்.✸ விழைவு: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டச் செயலாளர்).

திருவள்ளூர் மாவட்ட கழக 

கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர்: காலை 10.00 மணி  ✸ இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி ✸ தொடக்க உரை: மா.மணி (மாவட்ட காப்பாளர்)  ✸ தலைமை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்),  ✸ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) ✸ பொருள்: 13.05.2023 ஈரோடு கழக பொதுக் குழு தீர்மானங்கள் செயலாக்குதல், கழகப் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், விடுதலை சந்தா சேர்த்தல்  ✸ அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ✸ நன்றியுரை: ந.ரமேஷ் (மாவட்ட செயலாளர்).

கும்மிடிப்பூண்டி மாவட்ட 

கலந்துரையாடல் கூட்டம்

கும்மிடிப்பூண்டி: மாலை 5 மணி ✸ இடம்: பா.தெய்வசிகாமணி (கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர்) அலுவலகம் கோட்டைக்கரை பேருந்து நிலையம், கும்மிடிப்பூண்டி. ✸தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்) ✸ கருத்துரை: பொன்னேரி வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) ✸ பொருள்: 1) ஈரோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயலாக்குவது, 2) தமிழர் தலைவர் கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்களை நடைமுறை படுத்துதல், 3) கழக அமைப்பு பணிகள் குறித்து  ✸கழக மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், மற்றும் மாணவர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மகளிர் பாசறை, தொழிலாள ரணி, பகுத்தறிவாளர் கழகம் என  அனைத்து அணி களின் பொறுப்பாளர்கள்  மற்றும் அனைத்து தோழர் ளும் பங்கேற்று  சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்✸ அன்புடன்: ஜெ.பாஸ்கரன் (மாவட்டச் செயலாளர்) ✸ ஏற்பாடு: கும்மிடிப்பூண்டி மாவட்டம்.


No comments:

Post a Comment